இங்கிலாந்து அணியில் விளையாடிய அதிரடி வீரர்கள் ஒருவர் கெவின் பீட்டர்சன். அவர் தற்பொழுது இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் மாற்றி அமைத்துள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் போக்கை மாற்றியது

ஆரம்ப காலகட்டத்தில் சில வீரர்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஏறக்குறைய அனைத்து வீரர்களும் தடுப்பாட்டம் ஆடி வந்தார்கள். அப்பொழுது எங்களுக்கு முன் ஒரு கேள்வி இருந்தது எதற்காக இப்படி விளையாட வேண்டும் என்று, ஏற்படும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தோம்.

Kevin Pietersen

காலப்போக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் இங்கிலாந்து வீரர்களை தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதித்தது. வீரர்கள் அடுத்தடுத்து அதிரடியாக ஐபிஎல் தொடரில் விளையாட தொடங்கினார்கள். அதற்கு பின்னர் இங்கிலாந்து அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் அதிரடியாக விளையாடும் தன்மையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

நல்ல பிரதிபலிப்பாக அமைந்தது சமீபத்தில் இங்கிலாந்து அணி கைப்பற்றி உலக கோப்பை தொடர். அவர்களின் அதிரடி ஆட்டத்திற்கு கிடைத்த பரிசாக இதை நான் பார்க்கிறேன் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் இங்கிலாந்து அணியின் வீரர்கள் மத்தியில் அதிரடி ஆட்டத்தை ஊக்குவித்துள்ளது என்று கூறியுள்ளார்.

100 தொடர் முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும்

தற்பொழுது இங்கிலாந்தில் 100 தொடர் என்கிற பெயரில் ஒரு புதிய தொடர் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு அணிக்கும் 100 பந்துகள் என்கிற அடிப்படையில் இந்த தொடர் துவங்க இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக 8 அணிகள் இந்த தொடரில் இடம் பெற்று விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Kevin Pietersen

இந்த தொடர் சற்று முன்பாகவே துவங்கப்பட்டு இருந்திருந்தால் நிச்சயமாக இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் சற்று மாறுபட்டு இருந்திருக்கும் என்றும், நிறைய வெற்றிகள் இன்னும் இங்கிலாந்து அணியின் பெயரில் இணைந்து இருக்கும் என்றும் கெவின் பீட்டர்சன் இறுதியாக கூறி முடித்தார்.

இந்தத் தொடரில் இந்திய அணியின் சார்பாக ஷெஃபாலி வர்மா, ஜமியா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீட் கவுர், ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய வீரர்கள் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல உலக அளவில் நிறைய வீரர்கள் இந்த 100 தொடரில் இடம் பெற்று விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *