பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா!! அரையிறுதிக்குள் நுழையுமா நியூசிலாந்து?? 1

உலகக் கோப்பை தொடரின் 37 வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இதுவரை ஆடிய 7 லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளை வென்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அதே நேரம் அரையிறுதிக்குள் நுழைந்தது முதல் அணி ஆகும்.

பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா!! அரையிறுதிக்குள் நுழையுமா நியூசிலாந்து?? 2

இந்த உலகக் கோப்பையில் தோல்வியே தழுவாத அணியாக இருந்து வந்த இருந்து வந்த நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தற்போது 7 லீக் போட்டிகளில் ஐந்து போட்டிகளை வென்று 11 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. ஆஸ்திரேலிய அணியுடனான இன்றைய போட்டியை வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்குள் நுழையும் இரண்டாவது அணியாக நியூசிலாந்து இருக்கும். புள்ளிப்பட்டியலில் முதலிட வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

நியூசிலாந்து அணியில் ஆடும் 11 வீரர்கள்

பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா!! அரையிறுதிக்குள் நுழையுமா நியூசிலாந்து?? 3

மார்ட்டின் கப்டில், ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (கீப்பர்), ஜேம்ஸ் நீஷாம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.

ஆஸ்திரேலிய அணியில் ஆடும் 11 வீரர்கள்

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்

கள அறிக்கை:

லண்டனில் இன்று வானிலை தெளிவாக உள்ளதால் மழை வர எவ்வித வாய்ப்பும் இல்லை. அதே நேரம் களத்தில் ஆங்காங்கே சிறு பிளவுகள் இருப்பதால் சுழல் பந்து வீச்சிற்கு திருப்பங்கள் மிக அதிகமாக இருக்கும். இன்றைய களம் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *