இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த தொடரை இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது டி20 தொடரில் இந்திய அணி முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாரோ 50 ரன்கள், ஷிகர் தவான் 46 ரன்களும், சஞ்சு சாம்சன் 27 ரன்களும் குவித்தனர். அதற்கு பின்னர் களமிறங்கிய விளையாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் இந்திய அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

குறிப்பாக இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று திறம்பட வழிநடத்திக் கொண்டிருக்கும் ஷிகர் தவான் தனது பணியை மிகக் கச்சிதமாக செய்து வருகிறார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பல ஆண்டுகள் இந்திய அணிக்கு விளையாடிய நிலையில் இந்திய அணியின் ஒருநாள் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற வயதான 4 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.