ஷிகர் தவான்
2010 முதல் தனது சர்வதேச ஒருநாள் தொடரை துவங்கிய இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரர் ஷிகர் தவான் இதுவரை பதினோரு ஆண்டுகள் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். துவக்க வீரராக களமிறங்கி அணியின் அஸ்திவாரத்தை நன்கு அமைப்பதில் வல்லவராகத் திகழும் ஷிகர் தவானுக்கு பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான தொடரில் கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் தான் 35 வருடம் 255 நாள் வயதான நிலையில் கேப்டன் பதவி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று கொடுத்துள்ள ஷிகர் தவான், வருகிற 2023 ஒரு நாள் உலக கோப்பை தொடர் வரை இந்திய அணிக்கு விளையாடுவார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
