மஹிந்தர் அமர்நாத்
1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் பட்டம்பெற்ற மஹிந்தர் அமர்நாத் அந்த போட்டியில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் 3 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். மேலும் அந்த போட்டியில் 26 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்தார். மேலும் அந்த உலக கோப்பை தொடரில் 237 ரன்களும் 8 விக்கெட்களை எடுத்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப்பின் 1984 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது 34வது வயதில் இந்திய அணியின் ஒருநாள் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினார். ஆனால் அந்த போட்டியில் எந்த ஒரு முடிவும் வழங்கப்படவில்லை அதற்குப்பின் இவர் எந்த ஒரு போட்டியிலும் இந்திய அணிக்காக கேப்டன் பதவி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
