சையது கிர்மானி
அமர்ணத் போலவே சையது கிர்மானி தனது 34வது வயதில் இந்திய அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார். 1983 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு இடையிலான போட்டியில் கபில்தேவ் விளையாடாதாதன் காரணத்தால் இந்திய அணியின் கேப்டனாக சையது கிர்மானி பொறுப்பேற்று அணியை வழி நடத்தினார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனானன சென்னையை சேர்ந்த சையத் 49 ஒருநாள் போட்டியிலும் மற்றும் 88 டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்று மிக சிறப்பாக செயல்பட்டு பல முறை இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
