Use your ← → (arrow) keys to browse
அஜித் வடேகர்
இந்திய அணிக்க்காக ஒருநாள் தொடரில் முதன் முதலாக கேப்டன் பொறுப்பேற்றவர் என்ற பெயர்பெற்ற அஜித் 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழி நடத்தினார். ஆனால் அந்த தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
அந்தப் போட்டியில் அஜித் வடேகர் 64 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். இவர் ஒருநாள் தொடரில் அந்த இரண்டு போட்டிகளில் மட்டும் தான் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இடதுகை பேட்ஸ்மேனான இவர் 37 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 2113 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய அணிக்கு கேப்டன் ஆகும்போது இவருடைய வயது 33 வருடம் 103 நாள் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse