உங்களை முடிக்க இவர் போதும்! புதிய பந்துவீச்சாளரை வைத்து இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டும் மிரட்டும் முன்னாள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்! 1

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஒல்லி ராபின்சன் முதல் முறையாக களமிறங்கினார். தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அனைத்து நியூசிலாந்து அணி வீரர்களையும் அச்சுறுத்தினார். ஆனால் அதற்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் இவரால் விளையாட முடியாமல் போனது.

பத்து வருடங்களுக்கு முன்பு ட்விட்டர் வலைதளத்தில் இவர் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவிட்ட காரணத்தினால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவரை சில காலம் சஸ்பெண்ட் செய்தது. அதன் பின்னர் கவுண்டி கிரிக்கெட் தொடரில் வழக்கம்போல விளையாடி வந்த இவரை மறுபடியும் தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வைக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் இறங்கப் போகும் ராபின்சன்

பத்து வருடங்களுக்கு முன்பு அவர் சிறுவயதில் செய்த தவறு மிகப்பெரிய தவறுதான். ஆனால் அவர் அதை அவர் தன்னுடைய சிறுவயதில் செய்துள்ளார். அந்த வயது வரம்பில் என்ன செய்யவேண்டும் என்கிற மண பக்குவம் அவருக்கு இருந்திருக்காது என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மாண்டி பணேசர் கூறியுள்ளார்.

அந்த சர்ச்சையில் இருந்து மனதளவில் அவர் மீண்டு வந்து தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும். தன்னுடைய திறமையை அவர் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று மாண்டி பணேசர் தற்பொழுது கூறியிருக்கிறார்.

கைல் ஜேமிசனை போலவே நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார்

2020 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கைல் ஜேமிசன் மிக சிறப்பாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்களை திணறடித்தது நம் அனைவருக்கும் தெரியும். நல்ல உயரமாக இருக்கும் இவர் பந்தையும் நல்ல உயரத்தில் வீசி வருகிறார்.

இவரைப்போலவே தற்போது ஒல்லி ராபின்சன் பந்து வீசி வருகிறார். நல்ல உயரமான பந்துவீச்சாளரான ராபின்சனும் நிச்சயமாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் மிக சிறப்பாக பந்து வீசுவார் என்றும், கைல் ஜேமிசனை போலவே ஒல்லி ராபின்சன் இந்திய அணி வீரர்களை திணறடிப்பார் என்றும் மாண்டி பணேசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *