இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தனது பேட்டினால் ஆடுகளத்தில் அதிரடியக் காட்டியது போலவே தற்போது ஓய்விற்குப் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் பலருக்கும் தனது அதிரடியைக் காட்டி வருகிறார். தற்போது அந்த வேலையை மீண்டும் செய்துள்ளார் சேவாக். இந்திய அணியின் முன்னாள் கோச் கேரி கிறிஸ்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறும் போது தென்னாப்பிரிக்க அணியி கலாய்த்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆம், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன கேரி கிறிஸ்டன் நேற்று (நவ்.23) தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்கு தனது பாணியில் வாழ்த்துக்களை தெர்வித்த அதிரை வீரர் விரேந்தர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது,
‘ஒரு சிறந்த மனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சிறந்த பயிற்சியாளர் மற்றும் இதுவரை உலகக்கோப்பை வென்ற ஒரே ஒரு தென்னாப்பிரிக்க வீரர் இவர் தான்’ எனக் கூறி அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்திய அணிக்கு 2008ல் இருந்து 2011ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிறிஸ்டன். அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து போது இந்தியா அணி டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான பொட்டிகளிகலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அவரது சாதனையின் உச்சமாக 2011ல் இந்தியாவில் நடந்த 50 ஒவர் உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி. கோப்பையை வென்றவுடன் இவரையும் தூக்கி மைதானத்தில் வலம் வந்தது இந்திய அணி.
அதேபோல், தென்னாப்பிரிக்க அணி 1991ல் இருந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. மேலும், உலகத்தரம் வாய்த்த வீரர்கள் கிப்ஸ், ஸ்மித், டி வில்லியர்ஸ், ஷான் பொல்லாக், டேல் ஸ்டெய்ன், கேரி கிறிஸ்டன், லேன்ஸ் க்லூஸ்னர், மொகயா நிட்னி, மார்க் பவுச்சர் என அந்த அணியில் இது வரை ஆடிய அனைத்து வீரர்களும் அற்புத திறமை வாய்ந்தவர்கள். மேலும், வருடம் முழுவதும் எந்த ஒரு அணியுடனும் வருடம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி ஆடுவார்கள் தென்னாப்பிரிக்க அணியினர். ஆனால், உலகக் கோப்பை என்று வந்துவிட்டார் சொதப்பல் தான். சர்வதேச தொடர்களில் இறுதிப் போட்டிக்கூட செல்ல முடியாமல் முக்கியமான அபொட்டிகளில் சொதப்பி வெளியேறிவிடுவார்கள். இதன் காரணமாக அதி திறமை வாய்ந்த தென்னாப்பிரிக்க அணி இதுவரை ஒரு முறை கூட உலகக்கோப்பை வென்றதில்லை.
இதனை மந்தில் வைத்து தான், சேவாக் தனது வாழ்த்தில் உலகக்கோபை வென்று ஒரே ஒரு தென்னாப்பிரிக்கர் இவர் தான் என கலாய்த்துள்ளார்.
Happy Birthday to a wonderful man , wonderful coach and the only South African to win a World Cup so far 🙂 , the wonderful @Gary_Kirsten pic.twitter.com/KSioFyJ10C
— Virender Sehwag (@virendersehwag) November 23, 2017