அவரு போனதுக்கு அப்புறம்.. இந்தியாவுக்கு இன்னொருத்தன் இன்னும் அமையல; அதனால் தான் பலம்மிக்க டீமை நம்மால ஜெயிக்க முடியல - சரியாக பேசிய அஸ்வின்! 1

இந்திய அணியில் ஜாகிர் கான் போனபிறகு, சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இடது கை வேகப்பந்துவீச்சாளர் அமையவில்லை என்று பேசியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடந்த சில வருடங்களாகவே எதிரணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை பதட்டத்துடன் எதிர் கொண்டு அடிக்கடி ஆட்டம் இழந்து வருவதை நம்மால் காண முடிகிறது.

அவரு போனதுக்கு அப்புறம்.. இந்தியாவுக்கு இன்னொருத்தன் இன்னும் அமையல; அதனால் தான் பலம்மிக்க டீமை நம்மால ஜெயிக்க முடியல - சரியாக பேசிய அஸ்வின்! 2

2017ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் முகமது அமீர்,இந்திய டாப் ஆர்டர்ர் பேட்ஸ்மேன்களை வரிசையாக விக்கெட் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். விக்கெட்டுகளையும் வரிசையாக எடுத்தார்.

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மிட்ச்சல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தார்.

அவரு போனதுக்கு அப்புறம்.. இந்தியாவுக்கு இன்னொருத்தன் இன்னும் அமையல; அதனால் தான் பலம்மிக்க டீமை நம்மால ஜெயிக்க முடியல - சரியாக பேசிய அஸ்வின்! 3

இப்படி இந்திய அணிக்கு ஒரே பலவீனம் பல வருடங்களாக இருந்து வருவது மிகப்பெரிய பின்னடைவை தந்திருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். ஆனால் இந்திய வீரர்கள் அதை சரி செய்து கொண்டார்களா என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இவை ஒருபுறம் இருக்க, எதிரணி எப்படி இடது-கை வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துகிறது. அதேபோல இந்திய அணிலும் ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இருந்தால் கட்டாயம் எதிரணியை பவர்-பிளேப ஓவர்களில் அச்சுறுத்தி இருக்கலாம்.

ஆனால் ஜாகிர் கான் சென்ற பிறகு, இந்திய அணிக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறந்த இடது-கை பந்துவீச்சாளர்கள் கிடைக்கவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அவரு போனதுக்கு அப்புறம்.. இந்தியாவுக்கு இன்னொருத்தன் இன்னும் அமையல; அதனால் தான் பலம்மிக்க டீமை நம்மால ஜெயிக்க முடியல - சரியாக பேசிய அஸ்வின்! 4

“ஜாகீர் கான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணிக்கு சில இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் வந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் அணிக்குள் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. ஓரிரு தொடர்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர்.

ஜாகிர் கான் போன்று இன்னொரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அணியில் இல்லாததால் லிமிடெட் ஓவர் போட்டிகளில் எதிரணிக்கு நம்மால் போதிய அளவில் அழுத்தத்தை கொடுக்க முடியவில்லை. குறிப்பாக பவர்-பிளே ஓவர்களில் அழுத்தம் கொடுக்கவில்லை. அது நமக்கு பின்னடைவையே தந்திருக்கிறது. இடது-கை வேகப்பந்து பேச்சாளர்கள் விரைவில் அணிக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளும் கொடுக்கப்பட வேண்டும்.” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *