எங்களது ஆட்டம் உலகக்கோப்பை அணிகளுக்கு ஓர் எச்சரிக்கை: ஆப்கான் கேப்டன் அசாலட்டு!! 1

ஆசிய கோப்பை தொடரில் நாங்கள் ஆடிய ஆட்டம் உலக கோப்பை பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கர் கூறியுள்ளார் 2019 நடைபெறுகிறதோ அங்கெல்லாம் சொப்பனமாக விளங்கும் அதனை நீங்கள் பார்த்திருக்கலாம் பெரிய பெரிய அணிகளுக்கு எங்களது ஆட்டம் எச்சரிக்கை என கூறுகிறார் அவர்.

ஆசியக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எங்களது ஆட்டம் உலகக்கோப்பை அணிகளுக்கு ஓர் எச்சரிக்கை: ஆப்கான் கேப்டன் அசாலட்டு!! 2
Afghan cricketer Aftab Alam (L) celebrates with teammates after he dismissed Bangladesh batsman Liton Das during the one day international (ODI) Asia Cup cricket match between Bangladesh and Afghanistan 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ் தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தி யா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன. அடுத்து சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

நேற்று முன் தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. பாகிஸ்தான் அணி, அனுபவ வீரர் சோயிப் மாலிக்கின் சிறப்பான ஆட்டத்தால் போராடி யே வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டனர். எங்களது ஆட்டம் உலகக்கோப்பை அணிகளுக்கு ஓர் எச்சரிக்கை: ஆப்கான் கேப்டன் அசாலட்டு!! 3

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹசன் அலி 33-வது ஓவரின் போது, பீல்டிங் செய்த பந்தை ஆப்கான் பேட்ஸ்மேன் ஹஷ்மத்துல்லா ஷகிடி நோக்கி அச்சுறுத்தும் வகையில் எறிந்தார். ஆப்கான் கேப்டன் அஸ்கர் ஆப்கன் 37-வது ஓவரில் ரன் எடுக்க ஓடுகையில், பவுலர் ஹசன் அலி தோள்பட் டையில் லேசாக இடித்தார். பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி அவுட் ஆகி வெளியேறும்போது, அவரை வெளியே போ என்பது போல் ரஷித்கான் சைகை செய்தார். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளுக்கு முரணானது. இதற்காக மூன்று வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 15 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *