பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்களாம், அனால் உங்க பருப்பு எங்ககிட்ட வேகாது; இங்கிலாந்து அணிக்கு சவால்விட்ட ரவி அஸ்வின் !! 1
பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்களாம், அனால் உங்க பருப்பு எங்ககிட்ட வேகாது; இங்கிலாந்து அணிக்கு சவால்விட்ட ரவி அஸ்வின்..

மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இங்கிலாந்து அணியால் சிறப்பாக செயல்பட முடியுமா..? என்று ரவி அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்களாம், அனால் உங்க பருப்பு எங்ககிட்ட வேகாது; இங்கிலாந்து அணிக்கு சவால்விட்ட ரவி அஸ்வின் !! 2

குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை காலி செய்த இங்கிலாந்து அணி, இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 921 ரன்கள் அடித்த அசத்திருந்தது.இதனால் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை உள்ளடக்கிய பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது என்று இங்கிலாந்து அணியை பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் அதர்டன், “இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் அணியின் பயிற்சியாளரான பிறகு இங்கிலாந்து அணி., ஆக்ரோஷமாக விளையாடி வருகிறது. இதனால் எந்த நாட்டிலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று பேசியிருந்தார்.பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்களாம், அனால் உங்க பருப்பு எங்ககிட்ட வேகாது; இங்கிலாந்து அணிக்கு சவால்விட்ட ரவி அஸ்வின் !! 3

 

மைக்கேல் அதர்டனின் இந்த பேச்சு மற்றநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் மத்தியில் எதிர்ப்பை பெற்றுள்ளது.

 

இந்த நிலையில் மைக்கேல் அதர்டனின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “இங்கிலாந்து அணி விளையாடிய விதம் மற்றும் பயன்படுத்திய யுக்தி பாகிஸ்தான் மைதானத்தில் எடுபட்டுவிட்டது, இங்கிலாந்து அணி விளையாடிய விதம் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது , இதனால் இங்கிலாந்து அணி இனி வரும் டெஸ்ட் போட்டிகளிலும் இதேபோன்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று கூறுகின்றனர்”.

பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்களாம், அனால் உங்க பருப்பு எங்ககிட்ட வேகாது; இங்கிலாந்து அணிக்கு சவால்விட்ட ரவி அஸ்வின் !! 4

“ஆனால் என்னை பொருத்தவரையில் இங்கிலாந்து அணி., தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா உள்ளிட்ட அணிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் இதே ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்த முடியுமா..? என்ற கேள்வி எழுகிறது. பாகிஸ்தான் நாட்டில் விளையாடிய இந்த டெஸ்ட் போட்டியை விட இங்கிலாந்து அணி தன் சொந்த மண்ணிலேயே அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளது” என்றும் ரவி அஸ்வின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *