என்னடா இந்த அடி அடிக்குறீங்க..? மிகப்பெரும் சாதனை படைத்த இங்கிலாந்து அணி... மிரண்டு போன பாகிஸ்தான் வீரர்கள் !! 1
என்னடா இந்த அடி அடிக்குறீங்க..? மிகப்பெரும் சாதனை படைத்த இங்கிலாந்து அணி… மிரண்டு போன பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 500+ ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

என்னடா இந்த அடி அடிக்குறீங்க..? மிகப்பெரும் சாதனை படைத்த இங்கிலாந்து அணி... மிரண்டு போன பாகிஸ்தான் வீரர்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லே மற்றும் பென் டக்கட் அதிரடி துவக்கம் கொடுத்தனர். டெஸ்ட் போட்டி என்பதை மறந்து ஒருநாள் போட்டிகளை போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜோடி முதல் விக்கெட்டிற்கே 233 ரன்கள் குவித்தது. ஜாக் கிராவ்லே 111 பந்துகளில் 122 ரன்களும், டக்கர் 110 பந்துகளில் 107 ரன்களும் எடுத்தனர்.

இதன் பின் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஓலி போப்பும் 104 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த ஹாரி ப்ரூக் 81 பந்துகளில் 101* ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 15 பந்துகளில் 34* ரன்களும் எடுத்ததன் மூலம் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள இங்கிலாந்து அணி 506 ரன்கள் குவித்துள்ளது.

என்னடா இந்த அடி அடிக்குறீங்க..? மிகப்பெரும் சாதனை படைத்த இங்கிலாந்து அணி... மிரண்டு போன பாகிஸ்தான் வீரர்கள் !! 3

டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் 500 ரன்களை கடந்த முதல் அணியாக இங்கிலாந்து அணி உள்ளது. புரூக் 101, ஸ்டோக்ஸ் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் இதுவரை எந்த அணியும் 500 ரன்களை எடுத்ததில்லை. இதனால் 112 வருட சாதனையை முறியடித்தது இங்கிலாந்து. அதேபோல முதல் நாளில் எந்த அணி வீரர்களும் நான்கு சதங்கள் அடித்ததில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *