இதுவும் ஒரு மாதிரி ஜாலியாதான் இருக்கு... இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் குறித்து பேசிய ஜோ ரூட் !! 1
இதுவும் ஒரு மாதிரி ஜாலியாதான் இருக்கு… இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் குறித்து பேசிய ஜோ ரூட் !!

டெஸ்ட் போட்டிகளில் ஆக்ரோசமாக(bazbal approch) விளையாடும் முறை ஜாலியாக உள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

17 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது, இந்தத் தொடரின் முதல் போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணியை வதம் செய்த இங்கிலாந்து அணி 3-0 என முற்றிலுமாக தொடரை கைப்பற்றியது.

இதுவும் ஒரு மாதிரி ஜாலியாதான் இருக்கு... இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் குறித்து பேசிய ஜோ ரூட் !! 2

பேஸ்பால் முறை (Bazbal approach)

இந்த தொடரில் ஆரம்பம் முதலே அடித்து விளையாடத் துவங்கிய இங்கிலாந்து அணி, முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 500 ரன்கள் குவித்து வரலாற்றில் எந்த ஒரு அணியும் செய்திடாத மிகப் பெரும் சாதனை செய்து அசத்தியது. இங்கிலாந்து அணி மற்ற அணிகளுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டும் விதத்தில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடர் அமைந்திருந்தது.

பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடருக்கான பயிற்சியாளராக நியமித்த பிறகு, இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை அணுகும் விதம் மிகவும் ஆக்ரோசமாக உள்ளது. மற்ற அணிகளை போல் பொறுமையாக ரன்களை குவிக்காமல் அதிரடியாக செயல்பட்டு முதல் பந்திலிருந்தே ஆக்ரோசத்தை வெளிப்படுத்துகிறது, டெஸ்ட் தொடரில் இப்படி அதிரடியாக விளையாடும் முறையை பேஸ் பால் அப்ரோச்(bazbal approach) என கிரிக்கெட் வட்டத்தில் தெரிவிக்கின்றனர்.

இதுவும் ஒரு மாதிரி ஜாலியாதான் இருக்கு... இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் குறித்து பேசிய ஜோ ரூட் !! 3

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இப்படி அதிரடியாக விளையாடுவது ஜாலியாக உள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ ரூட் தெரிவித்ததாவது, “டெஸ்ட் தொடரை இப்படி அதிரடியாக விளையாடுவது மிகவும் சுவாரசியமாக உள்ளது, நீங்கள் இதை என்ன பெயர் வைத்து வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம், ஆனால் இது விளையாடுவதற்கு வேடிக்கையாக உள்ளது, ஆனால் இந்த அணுகுமுறையில், எதிரணிக்கு என்ன இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது சற்று கடினமானது, இந்த அணுகு முறையில் ஒரு ஓவருக்கு ஆறு அல்லது ஏழு ரன்கள் அடித்து விடலாம், அப்படி செய்யும் பொழுது அனைத்துமே நமக்கு சாத்தியம் போல தோன்றும், இப்படி அதிரடியாக செயல்படுவதால் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் உதாரணமாக ஒரு செசனில் 200க்கும் அதிகமான ரன்கள் தேவைப்பட்டால் அதையும் எளிதாக அடித்து விடலாம்எந்த ஒரு இழக்கும் இதனால் எளிதாக தெரிகிறது”.

இதுவும் ஒரு மாதிரி ஜாலியாதான் இருக்கு... இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் குறித்து பேசிய ஜோ ரூட் !! 4

“அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் டெஸ்ட் தொடரை எப்படி விளையாட வேண்டும் என்பதில் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளார் .மேலும் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் ஆக்ரோஷமாகவும் செயல்படுகிறார் இது மிகவும் சுவாரசியமாக உள்ளது” என ஜோ ரூட் தெரிவித்திருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *