மீண்டும் வருகிறார் ஹபீஸ்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் மற்றும் டி.20 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாத துவக்கத்தில் ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
அடுத்த மாதம் 13ம் தேதி துவங்கும் இந்த தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இதில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான முகமது ஹபீஸ் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
அதே போல் சாஹிப்ஜடா பர்கான் என்னும் புதுமுக வீரரும் முதன்முறையாக பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார். ஃப்க்கர் ஜமான், ஜூனைத், சர்பராஸ் அகமத், சோயிப் மாலிக் போன்ற நட்சத்திர வீரர்களும் வழக்கம் போல் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஜிம்பாப்வே அணியுடனான டி.20 தொடருக்கான பாகிஸ்தான் அணி;
ஃப்க்கர் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஹுசைன் தலட், சர்பராஸ் அகமத், ஹரீஸ் சோஹைல், சஹாதப் கான், முகமது நவாஸ், ஃபாகிம் அஸ்ரப், ஹசன் அலி, முகமது அமீர், உஸ்மான் கான், சஹீன் அஃப்ரிடி, சாஹிப்ஜடா ஃபர்கான்.
ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி;
ஃப்க்கர் ஜமான், இமாம் உல் ஹக், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், பாபர் அசாம், ஆசிப் அலி, சர்பராஸ் அகமது, முகமது நவாஸ், சாதப் கான், ஃபாகிம் அஸ்ரப், முகமது அமீர், ஜுனைத் கான், உஸ்மான் கான், யாசீர் சாஹ், ஹசன் அலி, ஹரீஸ் சோஹைல்.