இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்! 1

இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்!

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்த அணியால் நிச்சயம் முடியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் அரங்கில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் இந்திய அணியை பின்னுக்குத்தள்ளி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன. இருப்பினும் இந்த அணிகளுக்கு இடையே உள்ள புள்ளிகள் வித்தியாசம் குறைந்த அளவிலேயே இருக்கின்றன.

இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்! 2

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமான செயலாகும். இதுவே இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகிப்பதற்கு காரணமாக விளங்கியது. குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை இந்திய அணி இந்தியாவில் அடுத்தடுத்து வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

கடந்த 2012-13 ஆண்டுகளில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. அதன்பிறகு இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக்கூட இந்திய அணி இந்தியாவில் இழந்ததில்லை.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியது.

இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்! 3

இத்தகைய பலம் மிக்க இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு பாகிஸ்தான் அணியால் மட்டுமே முடியும் என தனது கணிப்பை தெரிவித்துள்ளார் 49 வயதான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக். பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணியை வீழ்த்தக்கூடிய அளவிற்கு இருக்கிறது என அவர் தனது கணிப்பில் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து வெளியிட்ட கருத்தில், “பலம் மிக்க இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த பாகிஸ்தான் அணியால் மட்டுமே முடியும். பாகிஸ்தான் அணியிடம் வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல்பந்துவீச்சு இரண்டிலும் மிகுந்த ஆழம் தெரிகிறது. அதை வைத்து பார்க்கையில் அவர்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என நினைக்கிறேன். 

இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்! 4

அரசு விவகாரம் காரணமாக இரு அணி வீரர்களும் தனிப்பட்ட தொடர்களில் பங்கேற்காமல் இருக்கின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு ஆஸ்திரேலியாவால் முடியும் என நம்புகிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டுமே பலம் மிக்கதாக இருக்கிறது. சமீபகாலங்களில் சுழல்பந்துவீச்சிலும்  ஆஸ்திரேலிய வீரர்கள் அசத்தி வருகின்றனர். இதை வைத்து பார்க்கையில்  இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவால் வீழ்த்த முடியும் என நினைக்கிறேன்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *