நியூசிலாந்து கிட்ட மரண அடி வாங்குனது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல… இப்பவும் சொல்றேன் பாகிஸ்தான் தான் சாம்பியன்; முன்னாள் வீரர் கணிப்பு
ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரரான வகாப் ரியாஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில தினங்களில் துவங்க இருக்கும் உலகக்கோப்பை கிர்க்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தனது முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்து 345 ரன்கள் எடுத்தாலும், பந்தவீச்சில் சொதப்பியது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காதது போல் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி, 43.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இது குறித்து வகாப் ரியாஸ் பேசுகையில், “பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட உள்ளதே பெரிய சவால் தான். பாபர் அசாம் உள்பட பாகிஸ்தான் அணியின் பல வீரர்கள் இந்தியாவில் விளையாடியது இல்லை, இதனால் நிச்சயமாக பாகிஸ்தான் அணி மீது அதிகமான அழுத்தங்கள் இருக்கும், அதிலும் குறிப்பாக இந்தியாவின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது சாதரண விசயமே கிடையாது. ஆனால் என்னை பொறுத்தவரையில் பாகிஸ்தான் அணியால் எவ்விதமான அழுத்தங்களையும் சமாளிக்க முடியும் என முழுமையாக நம்புகிறேன். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சொதப்பியிருந்தாலும், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என நம்புகிறேன். பாகிஸ்தான் வீரர்கள் தங்களது திறமைக்கு ஏற்ப விளையாடினால் பாகிஸ்தான் அணியால் சாம்பியன் பட்டமும் வெல்ல முடியும்” என்று தெரிவித்தார்.
உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி;
பாபர் அசாம், அப்துல்லாஹ் சஃபீக், ஃப்கர் ஜமான், இமாம் உல் ஹக், இஃப்திகார் அஹமத், ஆகா சல்மான், சவூத சக்கீல், ஷாதப் கான், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஷாகின் அப்ரிடி, உசாமா மிர்.