"இந்தியாவுக்கு இப்போ தெரிஞ்சிருக்கும் நாங்க எப்படிப்பட்ட டீம் என்று.." - எச்சரித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்! 1

சமீபகாலமாக பாகிஸ்தானை மோதிப்பார்த்த பிறகு, இந்தில்ல்லயாவிற்கு பாகிஸ்தான் எப்படிப்பட்ட அணி என்று நன்றாகப் புரிந்திருக்கும் என தனது பேட்டியில்லுள்ள கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் சல்மான் பட்.

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கியது. தகுதிச்சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சூப்பர் 12 சுற்று அக்டோபர் 22ஆம் தேதி துவங்குகிறது.

"இந்தியாவுக்கு இப்போ தெரிஞ்சிருக்கும் நாங்க எப்படிப்பட்ட டீம் என்று.." - எச்சரித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்! 2

23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. மற்ற போட்டிகளை விட இப்போட்டியில் அதீத கவனங்களை முன்னாள் வீரர்களும் விமர்சனங்களும் செலுத்தி வருகின்றனர். கணிப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி இந்தியாவை உலகக் கோப்பை தொடரில் வீழ்த்தியது. அதன் பிறகு ஆசிய கோப்பை தொடரில் இரண்டு முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. அதில் ஒரு முறை இந்திய அணியும், ஒரு முறை பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றது.

"இந்தியாவுக்கு இப்போ தெரிஞ்சிருக்கும் நாங்க எப்படிப்பட்ட டீம் என்று.." - எச்சரித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்! 3

கடைசி மூன்று முறை மோதியதில் இரண்டு முறை பாகிஸ்தான் அணி வெற்றியை பெற்றுள்ளதால் இம்முறை இந்திய அணி எதிர்கொள்வதற்கு கூடுதல் பலத்துடன் களமிறங்குகிறது. இதனை குறிப்பிட்டு தற்போது இந்திய அணி பாகிஸ்தானை குறைவாக எடை போட்டு இருக்க மாட்டார்கள் என எச்சரித்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட். அவர் கூறுகையில்,

“கடந்த மூன்று முறை மோதியதில் இரண்டு முறை எங்களது அணி இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது. இதனை அவர்கள் நன்றாக மனதில் வைத்துக் கொண்டு எளிதாக எங்களை எண்ணிவிட மாட்டார்கள். உலகக் கோப்பை போட்டியில் பனிப்பொழிவு மற்றும் டாஸ் இரண்டும் தோல்விக்கு காரணமாக கூறிவிடலாம். ஆனால் ஆசியக் கோப்பை தொடரில் குறிப்பாக சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது எளிதானதே இல்லை. முழுக்க முழுக்க தரமான கிரிக்கெட் போட்டி. அப்போட்டியில் நன்றாக செயல்பட்ட முகமது நவாஸ் க்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

"இந்தியாவுக்கு இப்போ தெரிஞ்சிருக்கும் நாங்க எப்படிப்பட்ட டீம் என்று.." - எச்சரித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்! 4

உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியதே இல்லை என அவர்கள் நினைத்திருந்த அனைத்தும் தற்போது முடிந்து விட்டது. ஆகையால் இரு அணிகளும் தற்போது சம பலத்துடன் இருக்கிறது. பாகிஸ்தான் அணி நிச்சயம் இம்முறையும் வெற்றி பெறும் என நான் கருதுகிறேன். காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் ஷாகின் அப்ரிடி நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக விளையாட வேண்டும்.” எனவும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *