மனாட்சியோட பேசுங்கடா… நீங்க இறுதி போட்டி வரை வந்ததே பெரிய அதிர்ஷ்டம்; உண்மையை பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை பாகிஸ்தான் அணி வந்ததே பெரிய விசயம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்திருக்கும் உலகக்கோப்பை டி20 தொடர் பாகிஸ்தான் அணிக்கு சற்று சோகமாகவே முடிந்திருக்கிறது. அரை இறுதிக்கு தகுதி பெறுவதே கடினம் என்ற நிலை இருந்த பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து அணியின் வெற்றியால் இன்னொரு வாய்ப்பு கிடைத்தது.
அதை அரை இறுதி போட்டியில் சரியாக பயன்படுத்திக் கொண்டு நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் பாகிஸ்தானின் நட்சத்திர பவுலர் சாகின் அப்ரிடி காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அப்போது இருந்து ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். முக்கியமான நேரத்தில் ஷாகின் அப்ரிடிக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றிருக்கும் என பலரும் பேசி வரும் நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரரான முகமது அமீர், பாகிஸ்தான் அணி இறுதி போட்டி வரை வந்ததே பெரிய விசயம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து முகமது அமீர் பேசுகையில், “இறுதி போட்டி வரை பாகிஸ்தான் அணி வந்ததே பெரிய விசயம் என்பதே உண்மை. இறுதி போட்டிக்கே பாகிஸ்தான் அணி தகுதியற்றது. அதிஷ்டத்தாலும், கடவுளின் உதவியாலும் மட்டுமே இறுதி போட்டி வரை பாகிஸ்தான் அணி தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மிக மிக மோசமாக இருந்ததது. பாகிஸ்தான் அணி இந்த தொடரில் நிச்சயம் தடுமாறும் என முன்பே கூறினேன், அது போன்றே நடந்தது. முதலில் பாகிஸ்தான் அணி தனது பேட்டிங் ஆர்டரை வலுப்பெற செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.