தெரியாம இந்திய அணியை விமர்சித்து விட்டேன் ; ஜெகா வாங்கிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்..
பாகிஸ்தான் அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற அதிரடி வீரர்கள் இல்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
பல எதிர்பாராத திருப்பங்களுடன் முடிந்த உலகக்கோப்பை தொடர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களுடைய வெளிப்படையான கருத்துக்களை தெரியப்படுத்த வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்படவில்லை என்று விமர்சித்து பேசியிருந்தார்.
பாகிஸ்தானை விமர்சிக்காமல் இந்திய அணியை மட்டும் விமர்சிப்பது எதற்காக….?
பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்ற வீரர்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில் நாசர் ஹுசைன் இந்திய அணியை மட்டும் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நாசர் ஹுசேனை ட்விட்டரில் பயங்கரமாக கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் நாசர் ஹுசைன் எதிர் கருத்து ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதில்,“ ட்விட்டரில் இந்திய அணியை மட்டும் விமர்சித்து விட்டு பாகிஸ்தான் அணி குறித்து எதுவும் சொல்லவில்லை என்று என்னை கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் நான் கூற வருவதே வேறு… பாகிஸ்தான் அணியில் டெப்த் பேட்டிங் இல்லை என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்,பாகிஸ்தான் அணியில் கடைசி நேரத்தில் அடித்து தொம்சம் செய்ய சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இல்லை, இருந்த போதும் பாகிஸ்தான் அணியில் தரமான பந்துவீச்சு உள்ளது, குறைந்த இலக்கை இங்கிலாந்து அணிக்காக நிர்ணயித்திருந்தாலும், கடைசி கட்டம் வரை போட்டியை நகர்த்தி செல்லும் அளவிற்கு பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பலமானதாக இருந்தது, ஒருவேளை அடிலைட் மைதானத்தில் இங்கிலாந்து அணியிடம் இதே போன்ற ஒரு நிலைமையில் இந்திய அணி சிக்கியிருந்தால் நிச்சயம் இந்திய அணி மோசமான நிலையை தான் எதிர் கொண்டிருக்கும். இந்திய அணியில் போதுமான வீரர்கள் உள்ளனர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, ஆனால் நான் ஒட்டு மொத்தமாக சொல்வது என்னவென்றால் அணியின் மைண்ட் செட் தான், தற்போதைய டி20 தொடருக்கான இந்திய அணியில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடித்து நொறுக்குங்கள் என்று சொல்லக்கூடிய இயான் மார்கன் போன்ற ஒரு வீரர்தான் தேவை” என்று நாசர் ஹுசைன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.