அடுத்த தொடருக்கான 20 பேர் கொண்ட அணி அறிவிப்பு, அனைவருக்கும் புதிய இடத்தியல் பயிற்சி! அனுபவ வீரருக்கு அணியில் இடம்! 1

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஐந்தாம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. அதன்பின் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மீண்டும் சர்வதேச போட்டியை நடத்த ஏற்பாடு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்தது. அதன்படி கடந்த 8-ந்தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

அடுத்த தொடருக்கான 20 பேர் கொண்ட அணி அறிவிப்பு, அனைவருக்கும் புதிய இடத்தியல் பயிற்சி! அனுபவ வீரருக்கு அணியில் இடம்! 2
Pakistan’s Mohammad Irfan, center, celebrates the wicket of New Zealand’s Kane Williamson during their ICC World Twenty20 2016 cricket match in Mohali, India, Tuesday, March 22, 2016. (AP Photo/Altaf Qadri)

கொரோனா காலத்திற்குப்பிறகு சர்வதேச அளவில் தொடங்கிய முதல் போட்டி இதுவாகும். நேற்றுடன் முடிவடைந்த இந்த தொடரில் இங்கிலாந்து 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

இதற்கிடையில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிறது ஐந்தாம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இறுதி செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-அடுத்த தொடருக்கான 20 பேர் கொண்ட அணி அறிவிப்பு, அனைவருக்கும் புதிய இடத்தியல் பயிற்சி! அனுபவ வீரருக்கு அணியில் இடம்! 3

1. அசார் அலி (கேப்டன்), 2. பாபர் அசாம் (துணைக் கேப்டன்), 3. அபித் அலி, 4. ஆசாத் ஷபிக், 5. பஹீம் அஷ்ரஃப், 6. பவத் அலாம், 7. இமாம் உல் ஹக், 8. இம்ரான் கான், 9. காஷிஃப் பாத்தி, 10. முகமது அப்பாஸ், 11. முகமது ரிஸ்வான், 12. நசீம் ஷா, 13. சர்பராஸ் அகமது, 14. ஷதாப் கான், 15. ஷாஹீன் ஷா அப்ரிடி, 16. ஷான் மசூட், 17. சோஹைல் கான், 18. உஸ்மான் ஷின்வாரி, 19. வஹாப் ரியாஸ், 20. யாசீர் ஷா.

இவர்களுடன் டி20 அணிக்கான 9 வீரர்கள் உள்ளனர். இவர்கள் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறமாட்டார்கள். ஆனால் பயிற்சி மேற்கொள்வார்கள்.

இந்தத் தொடருக்காக கடந்த மாதம் 28-ந்தேதி பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றடைந்தது. 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அடுத்த தொடருக்கான 20 பேர் கொண்ட அணி அறிவிப்பு, அனைவருக்கும் புதிய இடத்தியல் பயிற்சி! அனுபவ வீரருக்கு அணியில் இடம்! 4
NOTTINGHAM, ENGLAND – JUNE 03: Mohammad Hafeez of Pakistan celebrates his half century during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England and Pakistan at Trent Bridge on June 03, 2019 in Nottingham, England. (Photo by Laurence Griffiths/Getty Images)

2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 13-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 21-ந்தேதியும் தொடங்குகிறது. டி20 போட்டிகள் ஆகஸ்ட் 28-ந்தேதி, 30-ந்தேதி மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகள் நடக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *