டி.20 தொடருக்கான அணி அறிவிப்பு; முன்னாள் கேப்டனுக்கு அணியில் மீண்டும் இடம் !! 1

டி.20 தொடருக்கான அணி அறிவிப்பு; முன்னாள் கேப்டனுக்கு அணியில் மீண்டும் இடம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்பொழுது சவுதாம்படனில் நடைபெற்று வருகிறது.

டி.20 தொடருக்கான அணி அறிவிப்பு; முன்னாள் கேப்டனுக்கு அணியில் மீண்டும் இடம் !! 2

இந்தநிலையில், டெஸ்ட் தொடரை தொடர்ந்து நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான தனது அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியுடனான டி.20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில், அந்த அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அஹமது மீண்டும் இடம்பிடித்துள்ளார். அதே வேளையில் அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ஷான் மசூதிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

அதே போல், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் டி.20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

டி.20 தொடருக்கான பாகிஸ்தான் அணி;

பாபர் அசாம் (கேப்டன்), பஹார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராவுப், இப்திகர் அகமது, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது அமிர், நசீம் ஷா, சர்ப்ராஸ் அகமது, ஷதாப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *