விராட் கோலி கஷ்டப்பட்டு படைத்த சாதனையை அசால்டாக முறியடித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ! 1

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியிடித்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் பேட்ஸ்மனான பாபர் அசாம் ஒவ்வொரு போட்டியிலும் பல சாதனைகளை படைத்து வருகிறார். அதேபோல் நேற்று ஜிம்பாப்வேவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக நடைபெற்ற 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 3 விக்கெட்களை இழந்து 163 ரன்கள் குவித்தது.

விராட் கோலி கஷ்டப்பட்டு படைத்த சாதனையை அசால்டாக முறியடித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ! 2

இதில் முகமது ரிவான் அதிரிடி விளையாடி 91 ரன்கள் குவித்தார். இதையடுத்த கேப்டன் பாபர் அசாம் 52 ரன்கள் குவித்தார். ஜிம்பாப்வே பவுலர் லூக் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் குவித்து படுமோசமாக தோல்வி அடைந்தது. இதில் ஜிம்பாப்வே தொடக்க வீரர் வெஸ்லி மாதேவர் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் பவுலர் ஹாசன் அலி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலி கஷ்டப்பட்டு படைத்த சாதனையை அசால்டாக முறியடித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ! 3

இந்நிலையில், இந்த போட்டியில் அரைசதம் (52) அடித்த பாபர் அசாம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். இன்று தனது 52வது டி20 இன்னிஸ்சில் விளையாடிய பாபர் அசாம் 17 ரன்கள் அடித்த போதே 2000 ரன்களை எட்டி சாதனை படைத்துவிட்டார்.

இந்த சாதனையை 56 இன்னிஸ்சில் செய்து முதல் இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலியிடம் இருந்து முதல் இடத்தை பறிவிட்டார் பாபர் அசாம் . இந்த சாதனையை ஆரோன் பின்ச் 62 இன்னிஸ்சிலும், மெக்கல்லம் 66 இன்னிஸ்சிலும் படைத்து இருக்கிறார்கள்.

விராட் கோலி கஷ்டப்பட்டு படைத்த சாதனையை அசால்டாக முறியடித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *