இந்தியாவிற்கு வரமாட்டோம்... உலகக்கோப்பை ஆடமாட்டோம்ன்னு அடம்பிடிக்கும் பாகிஸ்தானுக்கு... இப்படியொரு வசதியை செய்துள்ளது பிசிசிஐ! - பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் எங்கே நடக்கும் என அறிவிப்பு! 1

50-ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடப்பதால், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வரவில்லை என்று விரும்பினால், அவர்களுக்கு வேறு நாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50-ஓவர் உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்தாண்டு இந்தியாவில் நடத்தப்படுவதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே இருக்கிறது. உலகக்கோப்பையை நான்காவது முறையாக இந்தியா எடுத்து நடத்துகிறது. முன்னதாக, 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு வரமாட்டோம்... உலகக்கோப்பை ஆடமாட்டோம்ன்னு அடம்பிடிக்கும் பாகிஸ்தானுக்கு... இப்படியொரு வசதியை செய்துள்ளது பிசிசிஐ! - பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் எங்கே நடக்கும் என அறிவிப்பு! 2

இந்த உலகக்கோப்பைக்கு முன்பு ஆசிய கோப்பைத் தொடர் நடைபெறுகிறது. அது பாகிஸ்தானில் நடத்தப்படுவதால் சிக்கல் ஏற்பட்டிருந்தது. ஏனெனில் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பையில் விளையாடமாட்டர். இந்திய அணி ஆடும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தினால் மட்டுமே இந்திய அணி பங்குபெறும் என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இது முற்றிலும் அடாவடித்தனம், தான்தோன்றித்தனம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் குழுமத்திடம் முறையிட்டது. இதில் அரசியல் விவகாரங்கள் இருப்பதால் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருமனதாக ஒப்புக்கொண்டது.  ஐக்கிய அரபு அமீரகம் அல்லது துபாய் ஏதேனும் ஒரு இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

இந்தியாவிற்கு வரமாட்டோம்... உலகக்கோப்பை ஆடமாட்டோம்ன்னு அடம்பிடிக்கும் பாகிஸ்தானுக்கு... இப்படியொரு வசதியை செய்துள்ளது பிசிசிஐ! - பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் எங்கே நடக்கும் என அறிவிப்பு! 3

ஆசியக்கோப்பை முடிவடைந்த அடுத்த ஓரிரு மாதங்களிலேயே 50-ஓவர் உலகக்கோப்பை வரவுள்ளது. இது இந்தியாவில் நடக்கிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நாங்கள் இந்தியாவிற்கு வரமாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறது. அவர்களும் உலககோப்பையை பங்கேற்கும் விதமாக வங்கதேசம் அல்லது ஐக்கிய அரபு அமீரகம் இவற்றில் ஏதேனும் ஒரு பொதுவான இடத்தில் பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகள் நடத்தப்படும் என்று பிசிசிஐயும் புதிய வசதியை செய்து கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.

பிசிசிஐ எடுத்திருக்கும் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருக்கிறது. ஏனெனில் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக வரமறுக்கும் பாகிஸ்தான் அணியினர் பாதுகாப்பாக உணரும் விதமாக பொதுவான இடத்தில் நடத்தப்படுகிறது. அதேப்போல் இந்திய அணியும் ஆசியகோப்பை தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு செல்லமறுப்பதால் பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டதும் வரவேற்கப்படுகிறது.

இந்தியாவிற்கு வரமாட்டோம்... உலகக்கோப்பை ஆடமாட்டோம்ன்னு அடம்பிடிக்கும் பாகிஸ்தானுக்கு... இப்படியொரு வசதியை செய்துள்ளது பிசிசிஐ! - பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் எங்கே நடக்கும் என அறிவிப்பு! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *