ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 6வது போட்டியான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஹாங்காங் அணியும் மோதுகின்றன.
இரு அணிகளுமே இந்திய அணிக்கு எதிரான தங்களது கடந்த போட்டிகளில் தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும், தோல்வியடையும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறும்.
இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியான இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
தங்களது கடந்த போட்டியில் இரு அணிகளுமே தோல்வியடைந்திருந்தாலும், இந்த போட்டியில் எவ்வித மாற்றமும் இல்லாமலே இரு அணிகளும் களமிறங்குகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன்;
முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஃப்கர் ஜமான், இஃப்திகார் அஹமத், குஷ்தில் ஷா, சாதப் கான், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஹரீஸ் ரவூஃப், நசீம் ஷா, ஷாநவாஸ் தானி.
ஹாங்காங் அணியின் ஆடும் லெவன்;
நிஜாகத் கான், யாசிம் முர்தசா, பாபர் ஹயாத், கின்சித் ஷா, ஐசாஸ் கான், ஜீசன் அலி, ஸ்காட் மெக்கென்னி, ஹாரூன் அர்சத், இசன் கான், ஆயூஸ் சுக்லா, முகமது காஜன்ஃபர்.