மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ! அடித்து நொறுக்கிய நியூசிலாந்து !
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது டி20 தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணி அடித்து துவம்சம் செய்து தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டி நேற்று மேற்கு நகரில் நடைபெற்றது. இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் 19.4 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்து வென்றது. பாகிஸ்தானுக்கு அருமையான தொடக்கத்தை அளித்த முகமது ரிஸ்வான் ஆட்டநாயகன் ஆனாா். நியூஸிலாந்தின் டிம் செய்ஃபொ்ட் தொடா் நாயகனாக அறிவிக்கப்பட்டாா்.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் பௌலிங் வீசத் தீா்மானிக்க, நியூஸிலாந்து இன்னிங்ஸை மாா்டின் கப்டில் – டிம் செய்ஃபொ்ட் தொடங்கினா். கப்டில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 19 ரன்கள் அடிக்க, உடன் வந்த செய்ஃபொ்ட் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 35 ரன்கள் சோ்த்திருந்தாா்.

ஒன்-டவுனாக வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, 5-ஆவதாக வந்த டேவன் கான்வாய் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 63 ரன்கள் விளாசினாா். பின்னா் வந்தவா்களில் கிளென் பிலிப்ஸ் 4 பவுண்டரிகளுடன் 31, ஜேம்ஸ் நீஷம் 2, ஸ்காட் குகெலெய்ஜன் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 14 ரன்கள் சோ்த்தனா்.
ஓவா்கள் முடிவில் டிம் சௌதி 6, கைல் ஜேமிசன் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப் 3, ஹாரிஸ் ரௌஃப், ஷாஹீன் அஃப்ரிதி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

அடுத்து 174 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய பாகிஸ்தானில் தொடக்க வீரா் முகமது ரிஸ்வான் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 89 ரன்கள் சோ்த்து வலுவான அடித்தளம் அமைத்தாா். உடன் வந்த ஹைதா் அலி 1 பவுண்டரி உள்பட 11 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். இறுதியாக பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது