பாண்டியா, இந்தியாவின் ஃபென் ஸ்டோக்சா?? பாக் பத்திரிக்கையாளர் கிண்டல் 1
Indian cricketer Hardik Pandya takes part in a practice session at Galle International Cricket Stadium in Galle on July 24, 2017. India will play three Tests, five one-day internationals and a Twenty20 game in Sri Lanka. The first Test starts on July 26 in Galle. / AFP PHOTO / ISHARA S. KODIKARA

இந்தியாவின் ஹர்திக் பாண்டியாவை இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சுடன் ஒப்பிடுவது சரியல்ல என பாகிஸ்தானின் விளையாட்டு  டீவி தொகுப்பாளர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் ஸ்போர்ட்ஸ் சேனல் பி டீவி ஸ்போர்ட்சில் தொகுப்பாளராக இருப்பவர் ஃபசீலா சபா. இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஹர்திக் பாண்டிய அந்த போட்டியில் அபாரமாக விளையாடி 66 பந்துகளில் 83 ரன்களை குவித்தார்.

போட்டி முடிந்த பின்னர் ஃபசீலா சபா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

https://twitter.com/FazeelaSaba1/status/909713295183110144

இந்தியாவின் ஹர்திக் பாண்டியா மிகச் சிறந்த ஆல் ரவுண்டர் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதற்க்குல் பாண்டியாவை இங்கிலாந்தின் பென் ஸ்டொக்சுடன் ஒப்பிடுவது ஏற்க்கத்தகாதது, இந்தியா ஊடகங்கள் அவரை மிகைப்படுத்திக் காட்டுகின்றன என பதிவிட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா என்ற ஒரு வீரர் இருப்பது 2105ல் தான் பலருக்குத் தெரியவந்தது. 2015ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வாகி அதிரடியாக ஆடிய போது தான் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

பாண்டியா, இந்தியாவின் ஃபென் ஸ்டோக்சா?? பாக் பத்திரிக்கையாளர் கிண்டல் 2

இந்திய அணிக்கு ஒரு நல்ல வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் தேவை என்ற நிலையில், சரியாக அணிக்கு வந்து சேர்ந்தார் பாண்டியா.

தனது சர்வதேச அறிமுக போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெற்று, சர்வதேச அரங்கிலும் தன்னால் ஜொலிக்க முடியும் எனோதை உலகிற்க்குக் காட்டினார்.

பின்னர், 2016 இந்தியாவில் நடைபெற்ற டி20 போட்டியில் அரையிருதி ஆட்டத்தில் ஒரு ஓவருக்கு 5 ரன் அடிக்க வேண்டிய நிலையில், தோனியின் நம்பிக்கையாக வங்கதேசத்திற்கு எதிரான அந்த போட்டியில் 3 விக்கெட் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்து தன் வேகப் பந்து வீச்சையும் நிரூபித்தார் பாண்டியா.

பாண்டியா, இந்தியாவின் ஃபென் ஸ்டோக்சா?? பாக் பத்திரிக்கையாளர் கிண்டல் 3

எதிர் பார்த்தது போலவே, விரைவில் அவருக்கு டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த இலங்கை சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ஹர்திக் பாண்டியா.

தனது, அந்த அறிமுக போட்டியிலேயே அதிரடியாக ஆடி அரை சதம் கண்டார் ஹர்திக். பின்னர் 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 300 ரன் கூட அடிக்க முடியாத நிலையில் மிகவும் பின் தங்கி இருந்தது.

பாண்டியா, இந்தியாவின் ஃபென் ஸ்டோக்சா?? பாக் பத்திரிக்கையாளர் கிண்டல் 4
(Photo Source: AFP)

சரியான சமயத்தில் இறங்கிய பாண்டியா, அற்புதமாக அதிரடியாக ஆடி சதம் அடித்து இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரை கொடுத்து வெற்றி பெறச் செய்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியாவுடான முதல் ஒரு நாள் போட்டியிலும் இதே போன்ற ஒரு நிலைமை தான், 87 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது இந்திய அணி.

அந்த சமயத்தில் இந்திய ஜாம்பவான் தோனியுடன் கைகோர்த்து 118 ரன் சேர்த்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டர் ஹர்திக் பாண்டியா.

பாண்டியா, இந்தியாவின் ஃபென் ஸ்டோக்சா?? பாக் பத்திரிக்கையாளர் கிண்டல் 5

இந்த பார்டன்சிப்பில் ஹர்திக் பாண்டியா அடித்தது மட்டும் 63 பந்துகளில் 87 ரன் ஆகும். அந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார் ஹர்திக்.

பாண்டியா, இந்தியாவின் ஃபென் ஸ்டோக்சா?? பாக் பத்திரிக்கையாளர் கிண்டல் 6
(Photo Source: AP Photos)

இப்படியாக மீண்டும் மீண்டும் தன்னை சிறந்த ஆல் ரவுண்டராக நிரூபித்துக் கொண்டிருக்கும் பாண்டியா, இந்தியாவின் பென் ஸ்டோக்ஸ் அல்ல, அவர் உலகின் முதல் ஹர்திக் பாண்டியா என்றே கூறலாம்.

Leave a comment

Your email address will not be published.