காரணமே தெரியாமல் தொடர்ந்து புறக்கணிப்பு; வேதனையுடன் காத்திருக்கும் இளம் வீரர்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகிர் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

முதல் இரண்டு போட்டிகளில் ராகுல் சாஹர், தீபக் சாஹர், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடம் பெறவில்லை. நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் ரோகித் சர்மா, கலீல் அகமது, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ராகுல் சாஹர், தீபக் சாஹர், லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
15 பேர் கொண்ட அணியில் 14 பேருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு மட்டும் ஏமாற்றமே மிஞ்சியது. என்றாலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளார்.

தொடரை வென்றது இந்தியா;
கடைசி டி20 போட்டியில் பவுலிங்கில் தீபக் சாஹரும் பேட்டிங்கில் ரிஷப் பண்ட்டும் அசத்தினர். ரிஷப் பண்ட்டிடமிருந்து சிறப்பானதொரு இன்னிங்ஸை எதிர்நோக்கி காத்திருந்த அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளார் ரிஷப் பண்ட்..
இந்திய அணி 27 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ரிஷப், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.