இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் ரிஷப் பண்ட் தான் என டெல்லி அணியின் பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் மும்பையில் இன்று நடக்கும் தகுதிச்சுற்றின் முதல் போட்டியில், மும்பை, புனே அணிகள் மோதுகின்றன, இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக ஐதராபாத்தில் வரும் 21ல் நடக்கும் பைனல் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி, இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு போகும்.
டெல்லி அணி, இத்தொடரில் இருந்து வெளியேறிய போது, அந்த அணியிம் சாம்சன், பண்ட், ஸ்ரேயாஷ் ஐயர் உள்ளிட்ட இளம் வீரர்களின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. இதனால் அந்த அணி மெகா இலக்குகளையும் சர்வசாதாரணமாக எட்டிப்பிடித்தது.
இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாள டிராவிட் கூறுகையில்,’ தனது தந்தை இழந்த சோகத்துடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அடியெடுத்து வைத்த பண்ட், அந்த சோகத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், சிறப்பாக விளையாடினார். அவரது இன்னிங்ஸ் அனைத்தும் குறைசொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. இது அவரது மன உறுதியை காட்டுகிறது. ஒருநாள் இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக பண்ட் இருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,’ என்றார்.