இந்திய அணி கெத்து தான்… ஆனா அவுங்கள சமாளிக்கிறது எங்களுக்கு பெரிய விசயம் கிடையாது; ஆஸ்திரேலிய கேப்டன் அதிரடி பேச்சு
இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி கடுமையாக முயற்சிக்கும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போட்டிகள் 22,24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்திய அணியுடனான முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து அந்த அணியின் முக்கிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகியுள்ளனர்.
சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்திருக்கும் நிலையில், இந்திய அணியுடனான ஒருநாள் தொடர் குறித்தான செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ், ஒருநாள் தொடரை வெல்ல கடுமையாக போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட் கம்மின்ஸ் பேசுகையில், “இந்திய அணி வலுவான அணி, போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாங்கள் இங்கு சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதற்காகவே வந்துள்ளோம். ஒருநாள் தொடரில் இந்திய அணியின் திட்டங்களை முறியடித்து சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்துவோம். இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை விட அடுத்த சில தினங்களில் துவங்க இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரே முக்கியமானது” என்று தெரிவித்தார்.
இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி;
பேட் கம்மின்ஸ், அலெக்ஸ் கேரி, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், ஜாஸ் இங்லீஸ், ஸ்டீவ் ஸ்மித், லபுசேன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேமிரான் க்ரீன், ஹசில்வுட், நாதன் எல்லீஸ், சியன் அபாட், மேத்யூ ஷார்ட், ஜான்சன், தன்வீர் சங்கா.