செம்ம டீல்.. பாதி விலையில் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டரை அள்ளிய கொல்கத்தா!! 15 கோடிக்கு போனவரை வெறும் 7 கோடிக்கு எடுத்து அசத்தல்.. 1

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பேட் கம்மின்ஸ் 7.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்று வரும் இந்த ஐபிஎல் ஏலத்தில் முன்னணி வீரர்கள் பலர் தக்க வைக்கப்படாமல் ஏலத்தில் கலந்து கொண்டு எதிர்பார்த்ததை விட அதிகமான கோடிக்கு சென்றிருக்கின்றனர்.

செம்ம டீல்.. பாதி விலையில் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டரை அள்ளிய கொல்கத்தா!! 15 கோடிக்கு போனவரை வெறும் 7 கோடிக்கு எடுத்து அசத்தல்.. 2

சென்னை அணியால் ஏலத்தில் நிச்சயம் எடுக்கப்பட்டு விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட டு பிளசிஸ் இம்முறை 7 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணியில் எடுக்கப்பட்டிருக்கிறார். சுரேஷ் ரெய்னா துரதிர்ஷ்டவசமாக முதல் சுற்றில் எடுக்கப்படவில்லை. ராபின் உத்தப்பா 2 கோடி ரூபாய்க்கும் டிவைன் பிராவோ 4.4 கோடி ரூபாய்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது வரையில் எடுக்கப்பட்டிருக்கின்றனர்.

அஸ்வின், டி காக் போன்ற வீரர்களை சென்னை அணி எடுக்க முயற்சித்தது. ஆனால் விலை அதிகமாக சென்றதால் இறுதியில் கைவிட்டது. அதேபோல் ஜேசன் ஹோல்டர் சென்னை அணியால் ஏலம் கேட்கப்பட்டார். பின்னர் அவர் 8.25 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

செம்ம டீல்.. பாதி விலையில் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டரை அள்ளிய கொல்கத்தா!! 15 கோடிக்கு போனவரை வெறும் 7 கோடிக்கு எடுத்து அசத்தல்.. 3

2014ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடி வரும் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் இம்முறை அவரை கொல்கத்தா அணி தக்க வைக்கவல்லை. ஏனெனில் 2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 15.5 கோடிக்கு அவர் எடுக்கப்பட்டு இருந்தார். அவரை ஏலத்தில் விட்டுவிட்டு குறைந்த விலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என கொல்கத்தா அணி திட்டமிட்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல இம்முறை அவரை 7.25 கோடிக்கு எடுத்திருக்கிறது. கடந்த முறையை விட பாதி விலைக்கு எடுத்திருப்பதால் இந்த ஏலம் கொல்கத்தா அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்து இருக்கிறது.

செம்ம டீல்.. பாதி விலையில் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டரை அள்ளிய கொல்கத்தா!! 15 கோடிக்கு போனவரை வெறும் 7 கோடிக்கு எடுத்து அசத்தல்.. 4

கொல்கத்தா அணி இதுவரை ஏலத்தில் நித்திஷ் ராணா, கம்மின்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 12.25 கோடிக்கு எடுக்கப்பட்டு இருக்கிறார். பெரும்பாலும் இவர்தான் வரும் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.