15.50 கோடிக்கு இதை தான் வாங்கப்போகிறேன் – உண்மையை வெளியிட்டு அதிரவைத்த பேட் கம்மின்ஸ்!
ஐபிஎல்-இல் கிடைத்த பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறேன் என கூறி அதிரவைத்துள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ்.
2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் வெளிநாட்டு வீரர்கள் பல கோடி ரூபாய்க்கு முன்னணி அணிகளால் எடுக்கப்பட்டனர். சிலர் 10 கோடி ரூபாய்க்கும் மேல் ஏலத்தில் எடுக்கப்பட்டு அதிர வைத்தனர்.
குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பேட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியால் 15.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ளார்.
இதற்க்கு முன்னர், வெளிநாட்டு வீரர்களில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவராக பென் ஸ்டோக்ஸ் விளங்கினார். அவர் ஐபிஎல் 2018 சீசனில் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஒரு பௌலர் இவ்வளவு பெரிய தொகைக்கு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேட் கம்மின்ஸிடம், ஐபிஎல் ஏலத்தில் கிடைத்த பணத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்? என கேட்கப்பட்ட கேள்விக்கு சுவாரஷ்யமான பதில் அளித்தார்.
இது குறித்து கம்மின்ஸ் கூறுகையில்,
“எனக்கு இந்தப் பணத்தை வைத்து என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. எனது காதலி பெக்கி பாஸ்டன், என்னிடம் முதலில் நமது வளர்ப்பு நாய்க்கு இரண்டு பொம்மைகளை வாங்கலாம்” எனக் கூறினார். அவர் தனது தேவைகளை வரிசைப்படுத்தி வைத்துள்ளார்” என்றார்.