அந்த பையன் எல்லாம் அப்படியே காணா போயிடுவான்; அடித்து சொல்லும் அக்தர் !! 1

அந்த பையன் எல்லாம் அப்படியே காணா போயிடுவான்; அடித்து சொல்லும் அக்தர்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் நீண்ட காலம் இதே ஃபார்மில் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகின் வெளிச்சத்தை பெற்ற ஜோஃப்ரா ஆர்ச்சர், தற்போதைய இங்கிலாந்து அணியில் மிக முக்கிய வீரராக மாறிவிட்டார்.

வெறும் இரண்டு வருட காலத்தில் சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர், இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்றதிலும் மிக முக்கிய பங்காற்றியவர்.

அந்த பையன் எல்லாம் அப்படியே காணா போயிடுவான்; அடித்து சொல்லும் அக்தர் !! 2

எதிரணி வீரர்களை நிலை குலைய செய்யும் அளவிற்கு அசுரத்தனமாக பந்துவீசி வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர், இதே பார்மில் நீண்ட காலம் விளையாட மாட்டார் என கிரிக்கெட் உலகின் முன்னாள் அசுரவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

சோயிப் அக்தர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் தான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதே போல் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கிடைத்த சொத்து எனவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அந்த பையன் எல்லாம் அப்படியே காணா போயிடுவான்; அடித்து சொல்லும் அக்தர் !! 3

இது குறித்து அக்தர் பேசியதாவது;

காயங்களால் அவதிப்பட்டு வந்த பேட் கம்மின்ஸ் பல தடைகளை கடந்து வந்து கடந்த இரண்டு வருடங்களாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். என்னை பொருத்தவரையில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்து வீச்சிற்கு கிடைத்த சொத்து. ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சரை பாருங்கள் அவரது பந்தில் அவ்வளவு தெளிவு இல்லை. ஜோஃப்ரா ஆர்ச்சர் நீண்ட காலம் விளையாடுவார் என கருதவில்லை. கடந்த ஐந்து போட்டிகளுக்கும் மேலாகவே ஜோஃப்ரா ஆர்ச்சரின் வேகம் குறைந்துவிட்டதை நான் பார்த்து வருகிறேன். மைக்கெல் வாகன் போன்றவர்கள் என்னை விட ஜோஃப்ரா ஆர்ச்சர் வேகமாக பந்துவீசுவதாக கூறுகின்றனர், ஆனால் அது தவறான ஒப்பீடு, இன்னிங்ஸ் முடியும் வரையில் நான் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசியவன்” என்று தெரிவித்துள்ளார் சோயிப் அக்தர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *