அடுத்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரடி ஆல்-ரவுண்டர் யூசுப் பதானை தக்கவைத்து கொள்ள வில்லை. இந்நிலையில், ஐந்து மாத தடையில் இருக்கும் யூசுப் பதான் அடுத்த வருட ஐபில் ஏலத்திற்கான தனது அடிப்படை விலையாக ரூபாய் 75 லட்சம் நிர்ணயித்து இருக்கிறார். இதற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கும் யூசுப் பதான், இந்த ஏலத்தில் நல்ல விலைக்கு செல்வார்.
அடிப்படை விலை 75 லட்சமாக யூசுப் பதான் நிர்ணயிக்க, அவரது சகோதரர் இர்பான் பதான், தனது அடிப்படை விலை 50 லட்சமாக நிர்ணயித்தார். 2016ஆம் ஆண்டு புனே அணிக்காக விளையாடிய இர்பான் பதான், 2017ஆம் ஆண்டு ஏலத்தில் அவரை யாரும் வாங்கவில்லை. அதன் பிறகு டுவைன் ப்ராவோவுக்கு பதிலாக குஜராத் லயன்ஸ் அணியில் இடம் பிடித்தார் இர்பான் பதான்.
தற்போது இந்தியாவில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடந்து வருகிறது. பதான் சகோதர்களுக்கு பரோடா கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த மூன்று மாதங்களாக இர்பான் பதான் எந்த வித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காததால், ஏலத்தில் அவரை வாங்க எந்த அணியும் முன் வராது.
அவரது சகோதரர் யூசுப் பதானும் கடந்த 4 மாதங்களாக எந்த வித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனாலும், அவர் டி20 கிரிக்கெட்டில் நல்ல பார்மில் இருப்பதால், அவர் ஏலத்தில் நல்ல விலைக்கு செல்வார். RTM கார்டு உபயோகித்து மீண்டும் அவரை கொல்கத்தா அணி வாங்கலாம், ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு என்று தெரிகிறது.
இன்னும் சில நாட்களில் ஏலத்தில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும். அதுமட்டும் இல்லாமல் அவர்களின் அடிப்படை விலையையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும். ஜனவரி 27 மற்றும் 28ஆம் தேதி பெங்களுருவில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபில் ஏலம் நடைபெறும்.