JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

புரோ கபடி இறுதிப் போட்டியில் குஜராத்தை பந்தாடிய பாட்னா பைரேட்ஸ் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.

புரோ கபடி லீக் தொடரின் 5-வது சீசன், கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. புதிய அணிகள் உட்பட மொத்தம் 12 அணிகள் கோதாவில் குதித்தன.தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பாட்னா பைரட்ஸ் 1

பல்வேறு நகரங்களில் நடந்த இந்த போட்டியில், லீக் சுற்று முடிவில் புதிய அணியான குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், உத்தரபிரதேச யோத்தா ஆகிய 6 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு புதிய வரவான தமிழ் தலைவாஸ் உள்பட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பாட்னா பைரட்ஸ் 2

மூன்று மாத காலம் நடைபெற்ற இந்த கபடித் தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (அக்.,28) இரவு 8 மணிக்கு நடைபெற்ற சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில், குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பாட்னா பைரட்ஸ் 3

சுகேஷ் ஹெக்டே தலைமையிலான அறிமுக அணியான குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ்அணி, 22 லீக் ஆட்டங்களில் 15 வெற்றி, 4 தோல்வி, 3 டிராவுடன் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக அடியெடுத்து வைத்தது. இத்தொடரில் குறைந்த ஆட்டங்களில்(4) தோல்விப் பெற்ற அணி குஜராத் மட்டும் தான்.

பர்தீப் நர்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணி, 22 லீக் ஆட்டங்களில் 10 வெற்றி, 7 தோல்வி, 5 டிராவுடன் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. ‘பிளே-ஆப்’ சுற்றில் அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன், பெங்கால் வாரியர்ஸ் அணிகளை சாய்த்து இறுதிப்போட்டியை எட்டியது. இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

இதில் குஜராத் அணி 2 முறையும், பாட்னா அணி ஒரு முறையும் வெற்றி பெற்றன. கடந்த 2 சீசனிலும் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆரம்பத்தில் பாட்னா அணியைவிட குஜராத் அணியின் கை ஓங்கியிருந்தது. இதனால் தொடக்கத்தில் குஜராத் அணி முன்னிலைப் பெற்றது. ஒரு கட்டத்தில் பாட்னா 6-14 என பின்தங்கியிருந்தது. பின்னர் பாட்னா அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் கேப்டன் பர்தீப் நர்வால் ஒரே ரைய்டில் 5 புள்ளிகள் எடுத்து திருப்புமுனை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பாட்னா பைரட்ஸ் 4

இதனால் முதல் பாதி நேரத்தில் பாட்னா அணி 21-18 என முன்னிலை பெற்றது. அதன்பிறகு 2-வது பாதி நேரத்திலும் குஜராத் அணியால் மீள முடியவில்லை. இறுதியில் பாட்னா அணி 55- 38 என மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் கூடியிருந்த தமிழக ரசிகர்கள் பெரும்பாலோனோர் பர்தீப் நர்வாலின் ஆட்டத்திற்காகவே பாட்னாவை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது. வென்ற பாட்னா அணிக்கு பரிசுக் கோப்பையுடன் 3 கோடி ரூபாயும், 2-வது இடம் பெற்ற குஜராத் அணிக்கு ஒன்றரை கோடி ரூபாயும் பரிசாக கிடைத்தன.



  • SHARE
  • விவரம் காண

    பயிற்சியாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! 10 வருடம் கழித்து உண்மையை உடைத்த கிராண்ட் பிளவர்

    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட்...

    வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

    வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

    இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

    இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

    இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

    இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

    நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

    நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...