வீடியோ; அவுட் கொடுக்காத அம்பயர்... தானாக வெளியேறி நேர்மையை நிரூபித்த டி காக் !! 1

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் டி காக் நேர்மையாக நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மாயன்க் அகர்வால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வீடியோ; அவுட் கொடுக்காத அம்பயர்... தானாக வெளியேறி நேர்மையை நிரூபித்த டி காக் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக டி காக் 46 ரன்களும், தீபக் ஹூடா 34 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பாரிஸ்டோ 32 ரன்களும், மாயன்க் அகர்வால் 25 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் லக்னோ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வீடியோ; அவுட் கொடுக்காத அம்பயர்... தானாக வெளியேறி நேர்மையை நிரூபித்த டி காக் !! 3

இந்தநிலையில், இந்த போட்டியில் லக்னோ அணியின் டி காக், நேர்மையாக நடந்து கொண்ட விதம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

ராகுல் விக்கெட்டுக்கு பிறகு நன்றாக ஆடிக்கொண்டிருந்த டி காக் அரைசதத்தை நெருங்கியநிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சந்தீப் ஷர்மா வீசிய இன்னிங்ஸின் 13வது ஓவரின் 4வது பந்து டி காக்கின் பேட்டை உரசிவிட்டு சென்ற நிலையில், அந்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் பிடித்துவிட்டார். அதற்கு சந்தீப் ஷர்மா அப்பீல் செய்ய, அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. பஞ்சாப் அணி ரிவியூவை பற்றி யோசிக்கக்கூட ஆரம்பிக்கவில்லை.

வீடியோ; அவுட் கொடுக்காத அம்பயர்... தானாக வெளியேறி நேர்மையை நிரூபித்த டி காக் !! 4

ஆனால் டி காக் நேர்மையாக நடந்துகொண்டார். அது பேட்டில் பட்டது என்பதால் அம்பயர் அவுட் கொடுக்காதபோதும், உடனடியாக எதைப்பற்றியும் யோசிக்காமல் நடையை கட்டினார் டி காக். டி காக்கின் நேர்மைக்கு பாராட்டு தெரிவித்து அவரது முதுகில் தட்டிக்கொடுத்து அனுப்பிவைத்தார் பவுலர் சந்தீப் ஷர்மா. டி காக்கின் நேர்மை மற்றும் சந்தீப் ஷர்மாவின் ரியாக்‌ஷன் ஆகிய இரண்டுமே பார்க்க அருமையாக இருந்தது. டி காக்கின் நேர்மையை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.

டி காக் தானாக களத்தில் இருந்து வெளியேறிய வீடியோ;

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *