பஞ்சாப் அணியை பதம்பார்த்த குஜராத் பவுலர்கள்... மீண்டும் சொதப்பல்... 158 ரன்கள் அடித்தது பஞ்சாப்! 1

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெடுகள் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

மோகாலியில் நடைபெற்று வரும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பஞ்சாப் அணியை பதம்பார்த்த குஜராத் பவுலர்கள்... மீண்டும் சொதப்பல்... 158 ரன்கள் அடித்தது பஞ்சாப்! 2

துவக்க வீரர் பிரப்சிம்ரன் கடந்த போட்டியில் முதல் பந்தில் டக்அவுட் ஆகினார். இந்த போட்டியில் இரண்டாவது பந்தில் டக்அவுட் ஆகி வெளியேறினார். நல்ல பார்மில் இருந்த தவான் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க பஞ்சாப் அணி தடுமாற்றமும் காணத்துவங்கியது.

ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷாட் வந்த முதல் பந்தில் இருந்தே அடிக்கத் துவங்கினார். ராஜபக்சே மறுமுனையில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.  ஒரு சிக்ஸ் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 24 பந்துகளில் 36 ரன்கள் அடித்திருந்த மேத்யூ ஷாட் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணியை பதம்பார்த்த குஜராத் பவுலர்கள்... மீண்டும் சொதப்பல்... 158 ரன்கள் அடித்தது பஞ்சாப்! 3

ஜித்தேஷ் ஷர்மா மீண்டும் ஒருமுறை நல்ல துவக்கம் கிடைத்தும் அதை பெரிய ஸ்கோராக மாற்றாமல் 23 பந்துகளில் 25 ரன்களுக்கு அவுட் ஆக, பஞ்சாப் அணி 100 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் விக்கெட் இழக்கக்கூடாது என்கிற நோக்கிலேயே விளையாடி ரன்ரேட்டில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் கவனம் செலுத்த தவறினர். ஷாம் கர்ரன் 22 பந்துகளில் 22 ரன்கள், ராஜபக்சே 26 பந்துகளில் 20 ரன்கள் என குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அவுட் ஆகினர்.

பஞ்சாப் அணியை பதம்பார்த்த குஜராத் பவுலர்கள்... மீண்டும் சொதப்பல்... 158 ரன்கள் அடித்தது பஞ்சாப்! 4

அடுத்து வந்த தமிழக வீரர் ஷாருக் கான் வெறும் 8 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 150 ரன்களை கடக்க முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே அடித்தது பஞ்சாப் அணி.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்த போட்டியில் அறிமுகமான மோகித் சர்மா, நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி மறக்க முடியாத அறிமுக போட்டியாக மாற்றினார். ஷமி, ஜோஸ்வா லிட்டில், ரசித் கான் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.

 

இந்த மைதானம் பேட்டிங் செய்ய மிகவும் சாதகமாக இருக்கும். முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 200 ரன்கள் அடிக்க வேண்டும். அதற்கு குறைவாக அடிக்கும் எந்த ஸ்கோராக இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் அணி எளிதாக சேஸ் செய்துவிடும் என்பது வரலாறு.

பஞ்சாப் அணியை பதம்பார்த்த குஜராத் பவுலர்கள்... மீண்டும் சொதப்பல்... 158 ரன்கள் அடித்தது பஞ்சாப்! 5

இப்படி ஒரு இக்கட்டான சூழலில், 153 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, பலம்மிக்க குஜராத் டைட்டன்ஸ் அணியை கட்டுப்படுத்தி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *