நீங்களாவது எங்க நாட்டுக்கு வாங்க; நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வருவமாறு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தீவிரவாதள் தாக்குதலை தொடர்ந்து உலக கிரிக்கெட் அணிகள் அனைத்தும் பாகிஸ்தான் செல்ல தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் தொடர் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
எந்த அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு செவி சாய்க்காத நிலையிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிர்க்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி கூறியதாவது, “பாகிஸ்தானிற்கு வந்த கிரிக்கெட் விளையாடுவது குறித்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் எங்களது கோரிக்கையை பரிசீலப்பதாக கூறியுள்ளது, அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம். எந்த அணி பாகிஸ்தான் வந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்பு விசயத்தில் எந்த குறையும் இருக்காது என்று நம்புகிறோம். அணிகள் பாகிஸ்தானிற்கு வந்து விளையாட சம்மதம் தெரிவித்துவிட்டால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பாதுகாப்பு குழுவே பாகிஸ்தானிற்கு வந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சோதனை செய்து கொண்டு, கண்கானித்து கொள்ளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.