உலககோப்பை புறக்கணிப்பா? பாகிஸ்தான் நிர்வாகம் வெறும் வாய் உதார் தான்..! - வெளிப்படையாக பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்! 1

ரமீஷ் ராஜா சொல்வது போல எதுவும் நடக்காது. பாகிஸ்தான் நிச்சயம் உலக கோப்பையில் விளையாடும் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார் டேனிஷ் கனேரியா.

2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசியகோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. ஆகையால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று பங்கேற்காது. பொது இடத்தில் நடந்தால் மட்டுமே பங்கேற்போம் என செயலாளர் ஜெய் ஷா பெட்டியில் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ஜெ ஷா

இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் தலைவர் ரமீஷ் ராஜா, “பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லை என்றால், நாங்கள் உலக கோப்பையில் பங்கேற்க இந்தியாவிற்கு வரமாட்டோம். புறக்கணிப்போம்.” என்றார். இந்த சர்ச்சை நீண்டுகொண்டே சென்றது.

தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது கருத்தை முன் வைத்திருக்கிறார் டேனிஷ் கனேரியா. அவர் கூறியதாவது:

“பாகிஸ்தான் அணி கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவ்வளவு தைரியம் இல்லாதவர்கள். பாகிஸ்தான் கலந்து கொள்ளவில்லை என்றால் என்ன? பிசிசிஐ அதை கண்டுகொள்ளுமா? நிச்சயம் கண்டு கொள்ளாது.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா

மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட அணி நிர்வாகம் பிசிசிஐ. வேறுவிதமாக வருமானத்தை ஈட்டி கொள்வார்கள். இதனால் பாதிப்பு யாருக்கு என்றால், பாகிஸ்தான் அணிக்கும் அதன் வீரர்களுக்கும் தான்.

பொறுப்பில்லாமல் இப்படி தொடர்ந்து புறக்கணிப்போம் என்று கூறுவது முறையற்றது. இது பலருக்கும் காயத்தை ஏற்படுத்துகிறது.

முதலில் இப்படி பேசுவார்கள். யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால், எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறி பாகிஸ்தான் அணியை கலந்துகொள்ள சொல்வார்கள்.

உலககோப்பை புறக்கணிப்பா? பாகிஸ்தான் நிர்வாகம் வெறும் வாய் உதார் தான்..! - வெளிப்படையாக பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்! 2

இந்தியா மட்டுமா பாகிஸ்தானுக்கு வர முடியாது என்று கூறி வருகின்றனர். அருகில் இருக்கும் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும் பாகிஸ்தானுக்கு வருவதை புறக்கணித்து வருகின்றனர். ஆகையால் தவறு இந்தியாவிடம் மட்டும் இல்லை.

பாகிஸ்தான் தனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, எப்படி அவர்களை நம் நாட்டிற்கு வரவைத்து விளையாட வைப்பது என்பதை திட்டமிடுங்கள். வீணாக பிரச்சனைகளை வளர்த்து இன்னும் எதிர்ப்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டாம்.

உலககோப்பை புறக்கணிப்பா? பாகிஸ்தான் நிர்வாகம் வெறும் வாய் உதார் தான்..! - வெளிப்படையாக பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்! 3

பாகிஸ்தான் ரசிகர்கள் இம்முறை பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகையால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மற்ற அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வர என்னென்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள். இறுதியில் கிரிக்கெட் மட்டுமே வெற்றி பெற வேண்டும்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *