அவரை டிவில்லியர்ஸ் என்று கூறுவதைவிட மிஸ்டர் 360 என்றுதான் கூறவேண்டும்
ஏபி டிவிலியர்ஸ் மைதானத்தில் நின்றால் எந்த பக்கத்தில் பந்தை தூக்கி அடிப்பார் என்று யாருக்கும் தெரியாது. அதனாலேயே அவரை செல்லமாக மிஸ்டர் 360 என்று அனைவரும் கூறுவார்கள். 2018 ஆம் ஆண்டு தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்ட டிவில்லியர்ஸ், தற்பொழுது மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்காக டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறார். இதற்கு அனைத்து ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களும் தங்களுடைய சந்தோசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய முன்னாள் ஓபனிங் வீரர் வீரேந்திர சேவாக் ஏபி டிவில்லியர்ஸ் இனி எல்லோரும் மிஸ்டர் 360 என்றுதான் அழைப்பார்கள். அவரை ஏபி டிவில்லியர்ஸ் என்று சொன்னால் கூட யாருக்கும் தெரியாது ஆனால் மிஸ்டர் 360 என்று கூறினால் அனைவரும் அடுத்த நொடியிலேயே அவரை நினைவு கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் இல் அசத்திய ஏபி டிவிலியர்ஸ்
குறிப்பாக இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக 7 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். அதிலும் குறிப்பாக டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில் பெங்களூரு அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர்களுக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அப்போது டிவிலியர்ஸ் நிதானமாக விளையாடி இறுதியில் தனது அதிரடியை காட்டி 42 பந்துகளில் 75 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக இறுதி ஓவரில் ஸ்டோயினிஸ் வீசிய பந்துகளை மிக அற்புதமாக கையாண்டு பவுண்டரிக்கு மேல் பறக்கவிட்டார். இதன் காரணமாக இறுதி ஓவரில் 23 ரன்கள் குவித்தார். அந்த போட்டியின் இறுதியில் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமே ஏபி டிவிலியர்ஸ் தான் என்று விரேந்திர சேவாக் கூறியிருக்கிறார்.

அவரை எல்லோரும் மிஸ்டர் 360 என்று தான் இனி நினைவில் கொள்வார்கள்
இறுதியாக விரேந்திர சேவாக் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் கழித்து பார்த்தாலும் அவருடைய பெயரை சொல்லி அவரை நினைவில் கொள்வதைவிட மிஸ்டர் 360 என்று கூறி தான் அவரை நினைவில் கொள்வார்கள்.
அந்த அளவுக்கு 360 டிகிரியிலும் மைதானத்தில் நின்று அதிரடியை காலகாலமாக காட்டி வருகிறார்.
மேலும் மீண்டும் டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாட இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் சேவாக் கூறியிருக்கிறார்