கிட்ட கூட நெருங்க முடியாது... விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசுவதே முட்டாள்தனம்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 1
கிட்ட கூட நெருங்க முடியாது… விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசுவதே முட்டாள்தனம்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு

பாபர் அசாம் கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாதவர், அவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் என டேனிஷ் கனரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர் தோல்விகள்..

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் 0-1 என தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, அதன் பிறகு நடைபெற்ற இங்கிலாந்து அணியிடம் 0-3 என மோசமாக தோல்வியடைந்து தொடரை இழந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

கிட்ட கூட நெருங்க முடியாது... விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசுவதே முட்டாள்தனம்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 2

பாகிஸ்தான் அணி தன்னுடைய சொந்த மண்ணிலேயே தொடர்ந்து அடுத்தடுத்த டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியுள்ளதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டத்திலும் பாகிஸ்தான் அணி விமர்சிக்கப்பட்டு வருகிறது. உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களை உள்ளடக்கிய அணி.. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களைக் கொண்ட அணி என்ற பெருமை பீத்திக்கொள்ளும் பாகிஸ்தான் அணி தன்னுடைய சொந்த நாட்டிலேயே தொடரை வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களே விமர்சிக்கும் வகையில் பாகிஸ்தான் அணியின் நிலைமை மாறியுள்ளது.

தகுதியில்லாத கேப்டன் பாபர் அசாம்…

குறிப்பாக இந்த மோசமான தோல்விக்கு முக்கிய காரணம்,பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தான் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டத்தில் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறார்.
கிட்ட கூட நெருங்க முடியாது... விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசுவதே முட்டாள்தனம்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 3
அந்த வகையில் கிரிக்கெட் செய்தி குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் விவாதித்து வரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா, மக்கள் அனைவரும் பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்த வேண்டும் அவர் கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டேனிஷ் கனரியா பேசுகையில்,“மக்கள், பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்த வேண்டும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் மிகப் பெரிய வீரர்களாவார்கள் அவர்களுடன் ஒப்பிடுவதற்கு பாகிஸ்தான் அணியில் ஒருவர் கூட கிடையாது. பாகிஸ்தான் அணியில் உள்ளவர்களை பேசச் சொன்னால், பேசுவதில் ராஜாவாக திகழ்வார்கள். ஆனால் கிரிக்கெட் விளையாட சொன்னால் அவர்கள் அதில் பூஜ்ஜியமாகத்தான் இருப்பார்கள்.

கிட்ட கூட நெருங்க முடியாது... விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசுவதே முட்டாள்தனம்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 4

குறிப்பாக பாபர் அசாம் கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாதவர் அணியை வழிநடத்தும் தகுதி அவரிடம் சுத்தமாக இல்லை. குறிப்பாக டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்படும் தகுதி அவரிடம் இல்லை, அவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் போன்ற வீரர்களை பார்த்து கேப்டன்ஷிப் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், அல்லது தன்னுடைய ஈகோவை எடுத்து வைத்துவிட்டு எப்படி நல்ல கேப்டனாக இருக்க வேண்டும் என்பதை சர்பிராஸ் அஹமதிடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என டேனிஷ் கனரியா பாபர் அசாமை கடுமையாக விம்சித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *