தங்க மங்கை ஹிமா தாஸுக்கு விராட் கோஹ்லி பாராட்டு !! 1

தங்க மங்கை ஹிமா தாஸுக்கு விராட் கோஹ்லி பாராட்டு

தடகளத்தில் தங்க பதகங்களை அள்ளி வரும் இந்திய வீராங்கனை ஹிமா தாஹிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஹீமா தாஸ். இவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார். இவர் கடந்த 19 நாட்களில் 5 தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து இவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “19 நாட்களில் 5 தங்கப் பதக்கங்கள். ஒரு தங்கை மங்கை ஹீமா தாஸ், உங்களுக்கு எனது பாராட்டுகள். நீங்கள் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஒரு வலிமையான முன் உதாரணம்’ எனப் பதிவிட்டார்.

தங்க மங்கை ஹிமா தாஸுக்கு விராட் கோஹ்லி பாராட்டு !! 2

இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவின் வாழ்த்திற்கு ஹீமா தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், “நன்றி அனுஷ்கா. நான் உங்களுடைய தீவிர ரசிகை” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் ஹீமாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விராட் தனது ட்விட்டர் பக்கத்தில்,“இது ஒரு மிகப்பெரிய சாதனை. தங்க மங்கை ஹீமாவின் சாதனை அனைவரையும் பெருமை பட வைத்துள்ளது. மேலும் உங்களது வெற்றி தொடர வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *