சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்னை எடுத்தது இவர்தான் பியூஸ் சாவ்லா ஓபன் டாக்
பியூஸ் சாவ்லா இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆவார் இவர் 2008 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 6.75 கோடி கொடுத்து எடுத்தது. இந்நிலையில் தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்க காரணமானவர் யார் என்று வெளியிட்டுள்ளார் அவர் . அவர் கூறுகையில்….
ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக சென்னையில் நாங்கள் பயிற்சி செய்துகொண்டிருந்தோம். அப்போது தோனியிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன் என்னை ஏன் சென்னை அணியில் எடுக்க முற்படுகிறீர்கள் என்று கேட்டேன்.? யார் என்னை சென்னை அணியில் எடுக்க முடிவு செய்தது? என்றும் கேட்டேன் இதற்கு கண்டிப்பாக நான் தான் அந்த முடிவை எடுத்தேன் என்று கூறினார் தோனி. அவர்தான் என்னை சென்னை அணியில் எடுத்திருக்கிறார் என்று உண்மையை வெளியே சொன்னார் சொல்லியுள்ளார் பியூஸ் சாவ்லா.
பியூஸ் சாவ்லா கிங்ஸ் லெவன் மற்றும் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளார். இவர் மொத்தம் 150 போட்டிகளில் விளையாடி 157 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பியுஸ் சாவ்லா தேர்வு செய்த டெஸ்ட் ‘லெவன்’ அணியில் இந்தியாவின் டிராவிட், தோனி, கோஹ்லி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
முன்னாள் இந்திய ‘சுழல்’ வீரர் பியுஸ் சாவ்லா 31, ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ. 6.75 கோடிக்கு சென்னை அணியில் ஒப்பந்தமானார். கொரோனா காரணமாக 13வது ஐ.பி.எல்., சீசன் ஒத்திவைக்கப்பட்டதால் வீட்டில் ஓய்வில் உள்ள இவர், ‘ஆல்–டைம்’ சிறந்த டெஸ்ட் ‘லெவன்’ அணியை தேர்வு செய்தார்.
இதில் இந்தியா சார்பில் சேவக், சச்சின், கபில் தேவ் ஆகியோரை தேர்வு செய்த இவர், டிராவிட், தோனி, கோஹ்லிக்கு இடம் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியா சார்பில் மாத்யூ ஹைடன், ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன் வாய்ப்பு பெற்றனர்.
பிரையன் லாரா (விண்டீஸ்), அம்புரோஸ் (விண்டீஸ்), வாசிம் அக்ரம் (பாக்.,), முரளிதரன் (இலங்கை) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். 12வது வீரராக தென் ஆப்ரிக்காவின் காலிஸ் இடம் பிடித்துள்ளார்.
‘லெவன்’ அணி: சேவக், ஹைடன், பாண்டிங், சச்சின், லாரா, கில்கிறிஸ்ட், கபில்தேவ், அக்ரம், வார்ன், முரளிதரன், அம்புரோஸ். 12வது வீரர்: காலிஸ்