பஞ்சாப்பிற்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை !! 1
MS Dhoni of the Chennai Superkings and Ravichandran Ashwin of the Kings XI Punjab during match twelve of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Kings XI Punjab and the Chennai Super Kings held at the Punjab Cricket Association IS Bindra Stadium in Mohali on the 15th April 2018. Photo by: Arjun Singh / IPL/ SPORTZPICS
பஞ்சாப்பிற்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை

ஐ.பி.எல் டி.20 தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய இந்த தொடரின் லீக் போட்டியில் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்றைய கடைசி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

புனேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப்பிற்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை !! 2
Photo by: Arjun Singh / IPL/ SPORTZPICS

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சேன் வாட்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டூபிளசிஸ் அணியில் இடம்பெற்றுளார்.

அதே போல் பஞ்சாப் அணியிலும் ஸ்டோனிஸ் மற்றும் யுவராஜ் சிங் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கருண் நாயர் மற்றும் டேவிட் மில்லர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, தோனி, சாம் பில்லிங்ஸ், டூவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

இந்த போட்டிக்கான பஞ்சாப் அணி;

கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், ஆரோன் பின்ச், டேவிட் மில்லர், கருண் நாயர், மனோஜ் திவாரி, அக்‌ஷர் பட்டேல், ரவிசந்திர அஸ்வின், ஆண்ட்ரியூ டை, மோஹித் சர்மா, அன்கிட் ராஜ்புட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *