முதல் போட்டியில் வெற்றி பெற்று மொமன்ட்டத்தை பிடிக்க வேண்டும் : விக்கெட் கீப்ப்ர

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 16-ந்தேதி (வியாழக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் கொல்கத்தா சென்றுள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா விளையாடி வருகிறார். ஒரு டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் முதல் இலக்கு என சஹா கூறியுள்ளார்.

இதுகுறித்து சஹா கூறுகையில் ‘‘கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளத்தை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், முதல் இலக்கு முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். இது தொடரை வெல்வதற்கு உத்வேகமாக இருக்கும்.

ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. ஒவ்வொன்றிலும் மாறுபட்ட சவால்கள் உள்ளன. நாம் தயார் செய்தது போன்று அங்கு இருக்காது. ஒவ்வொரு போட்டிக்கும் நாம் சென்று கொண்டிக்க வேண்டியதுதான். இலங்கைக்கு எதிரான தொடரில் நாம் சிறப்பாக செயல்பட்டால், பின்னர் தென்ஆப்பிரிக்கா தொடர் குறித்து சிந்திப்போம்.

 

சுழற்பந்து வீச்சில் மற்ற வீரர்களை விட அஸ்வின்தான் சிறந்தவர். அவர் பல்வேறு மாறுபட்ட பந்துகளை வீசக்கூடியவர். ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரை விட வேரியேசன் பந்துகளை வீசக்கூடியவர்’’ என்றார்.

Editor:

This website uses cookies.