இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் மழை குறுக்கீடு காரணமாக நாளை (ஜூலை 10) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ராஹ், புவி இருவரின் சிறப்பான பந்துவீச்சில் திணறிய நியூஸிலாந்து துவக்க வீரர்கள் ரன்களைக் குவிக்க தடுமாறினர். இதனால், துவக்கத்தில் ரன் ரேட் ஓவருக்கு 3.5 கூட வரவில்லை. ராஸ் டைலர் நிலைத்து ஆடியதால், 35 ஓவர்களுக்கு பிறகு சற்று ரன் சேர்க்க அந்த அணியின் ரன் ரேட் ஓவருக்கு 4-ஐ கடந்தது.

46.1 ஓவரில் 211/5 என நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் இன்று நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற முடிவுக்கு நடுவர்கள் வந்து ஆட்டத்தை ரிசர்வ் டே-விற்கு ஒத்தி வைத்தனர்.
ரிசர்வ் டே போட்டி – துவங்கும் நேரம்
இந்த அரையிறுதி ஆட்டம் நாளை மீண்டும் இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கவுள்ளது. அப்போது, நியூஸிலாந்து அணி தனது பேட்டிங்கை எவ்வித மாற்றமும் இன்றி 46.1 இல் இருந்து துவங்கும். அதன்பிறகு, இந்தியா தனது 50 ஓவர்களை சந்திக்கும்.