நேரத்தை வீணடிக்க வேண்டாம்; வீரர்களுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுக்கும் பொலார்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் கிடைத்துள்ள இந்த இடைவெளியை கிரிக்கெட் வீரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொல்லார்டு தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உள்ளூர், சர்வதேச என அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். குறிப்பாக உலகளவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் அதிக அளவிலான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

நேரத்தை வீணடிக்க வேண்டாம்; வீரர்களுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுக்கும் பொலார்டு !! 1

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள நேரத்தை தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் ஒயிட்-பால் கிரிக்கெட் அணி கேப்டன் பொல்லார்டு கூறுகையில் ‘‘கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், மனதளவிலும், உடல் அளவிலும் ஆரோக்கியத்தை அப்படியே தக்கவைத்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு அதை வெளிப்படுத்துவற்கு சரியான நேரம். இந்த நேரத்தில் கிரிக்கெட் வாழ்க்கையில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம், கிரிக்கெட் வாழ்க்கை முன்னோக்கி எடுத்துச்செல்ல நாம் விரும்புவது என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறிய காயம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை புறக்கணித்த நேரத்தில் உடற்தகுயில் கவனம் செலுத்தி அடுத்த தொடர்களுக்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன்” என்றார்.

நேரத்தை வீணடிக்க வேண்டாம்; வீரர்களுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுக்கும் பொலார்டு !! 2

வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜூன் 4-ந்தேதியில் இருந்து விளையாட இருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தொடர் நடைபெறுமா? என்பது சந்தேகமே… • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை டஹெர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....