4.ஜேசன் ஹோல்டர்
இந்திய வீரர்கள் மட்டுமல்ல வெளிநாட்டு வீரர்களுக்கு தோனி தனது தலைமைப் பண்பின் மூலம் வழி காட்டியுள்ளார். தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அனியிண் கேப்டன் ஜேசன் ஹோல்டர். அவர் முன்னர் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியுள்ளார். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர், 2015 உலகக்கோப்பை துவங்கும் முன் கூறியதாவது, ‘ ஒரு கேப்டனாக எனக்கு எப்போதும் தோனி தான் முன்னுதாரனம், தோனி அணியை அற்புதமாக கையாளுகிறார். அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.’ எனக் கூறினார் ஹோல்டர்