ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் அனைவராலும் பேசப்படுகின்ற அணிகள் என்றால் அது மும்பை சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் தான். அதிலும் குறிப்பாக மும்பை மற்றும் சென்னை அணி கோப்பையை கைப்பற்றி இருந்தாலும் பெங்களூரு அணி ஒருமுறை கூட கைப்பற்றவில்லை.

இருப்பினும் அவர்களுக்கு சமமாக இந்த அணியை எல்லோரும் பார்ப்பார்கள்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தற்பொழுதைய இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் விளையாடிய வீரர்கள் பற்றி பார்ப்போம்
ஷேன் வாட்சன்

ஷேன் வாட்சன் முதல்முதலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட தொடங்கியவர். அந்த அணிக்காக பல போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடியவர். 2016 இரன் மட்டும் 2017 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் அணி இடைக்கால தடை பெற்றதால், அவர் பெங்களூருக்கு விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விராட் கோலி தலைமையில் கீழ் விளையாடிய ஷேன் வாட்சன் அவ்வளவாக ரன்கள் குவிக்க வில்லை.
பெங்களூர் அணிக்காக மொத்தமாக 24 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 250 ரன்கள் மட்டுமே குவித்தார். மேலும் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் 75 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாட ஆரம்பித்த வாட்சன் 32 போட்டிகளிலேயே 953 ரன்களை குவித்துள்ளார். சென்னை அணிக்காக 2018 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற ஒரு முக்கிய காரணமாக வாட்சன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்தீவ் பட்டேல்

அகமதாபாத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பார்த்தீவ் பட்டேல் முதலில் சென்னை அணிக்காக விளையாட தொடங்கினார். மூன்று ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடியவர் மொத்தமாக 517 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் பல அணிகளுக்காக விளையாட ஆரம்பித்து இறுதியாக பெங்களூர் அணிக்காக விளையாட தொடங்கினார். பெங்களூர் அணிக்காக 32 போட்டிகளில் 731 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிம் சவுத்தி

ஐபிஎல் தொடரில் மும்பை சென்னை மற்றும் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஒரே வீரர் டிம் சவுத்தி ஆவார்.அவர் 2011ம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடினார், 5 போட்டிகளில் விளையாடிய சவுத்தி 4 விக்கெட்டுகளை மட்டும் கைப்பற்றி ஏமாற்றினார். அதன் பின்னர் பல அணிகள் விளையாடி இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.பெங்களூர் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். பெங்களூர் அணிக்காக விளையாடிய அவரது பவுலிங் எக்கனாமிக் 9.97 என்பது குறிப்பிடத்தக்கது.
கேதர் ஜாதவ்

மகாராஷ்டிராவை சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான ஜாதவ் முதலில் டெல்லி அணிக்காக விளையாடினார். டெல்லி அணிக்காக 17 போட்டிகளில் வெறும் 350 ரன்களை மட்டுமே அவர் அடித்தார்.
அதன் காரணமாக டெல்லி அணி அவரை வெளியேற்றியது. அதன் பின்னர் பெங்களூர் அணிக்காக விளையாட தொடங்கினார் ஆனால் அங்கேயும் அவ்வளவாக அவர் விளையாடவில்லை.
அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட தொடங்கினார். சென்னை அணிக்காக பல மறக்க முடியாத ஆட்டங்களை தந்த கேதர் ஜாதவால் சமீப காலமாக சிறப்பாக பங்களிக்க முடியவில்லை அதன் காரணமாக சென்னை அணி அவரை அதிரடியாக தங்களது அணியில் இருந்து வெளியேற்றியது. தற்போது அவர் தனது அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரமணியம் பத்ரிநாத்

சென்னை அணிக்காக ஆரம்ப காலகட்டத்தில் விளையாடத் தொடங்கிய பத்ரிநாத் 95 போட்டிகளில் 1441 ரன்களை குவித்து, சென்னை அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார். அதன் பின்னர் சரியாக விளையாட முடியாமல் போன காரணத்தினால் அவரை அந்த அணி வெளியேற்றியது. அதன்பின்னர் பெங்களூர் அணிக்காக விளையாட தொடங்கிய பத்ரிநாத் மீண்டும் நன்றாக விளையாடாத காரணத்தினால் பெங்களூரு அணியும் அவரை வெளியேற்றியது.
அல்பி மோர்கல்

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் வாழ்வார்கள் முதலில் சென்னை அணிக்காக விளையாட தொடங்கினார். சென்னை அணிக்காக அவர் மொத்தமாக 28 போட்டிகளில் விளையாடினார். அதில் 227 ரன்கள் குவித்தவர்கள் பந்துவீச்சில் 76 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு பெங்களூர் அணியால் மோர்க்கல் வாங்கப்பட்டார். ஆனால் அந்த ஆண்டு அவரால் அவ்வளவு சரியாக விளையாட முடியாமல் போனது வெறும் 7 போட்டிகளில் 45 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. வந்து வீசிடும் அவரால் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.