கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகவும் திறமையான தலைசிறந்த வீரர்கள் மட்டுமே அதிக ரன்களை அடிக்க முடியும் அதிலும் குறிப்பாக எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் சமாளிக்கக்கூடிய வீரர்களால் தான் அரை சதம் மற்றும் சதங்களை விலாச முடியும்.
மேலும் ஒரு சில வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் ஆகவே திகழ்ந்து வருகின்றன. அவர்களுடைய பேட்டிங் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கும். இந்நிலையில் சர்வதேச தொடர்களில் கடந்த 4 ஆண்டுகளில் அதிக சதங்களை அடித்த 5 வீரர்களை பற்றி நாம் இங்கு காண்போம்.
ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக மூன்று விதமான தொடர்களிலும் மிக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களை மிக எளிதாக கையாள கூடிய திறமை கொண்ட ஸ்டீவ் ஸ்மித் கடந்த 4 ஆண்டுகளில் மூன்றுவிதமான சர்வதேச தொடர்களில் பங்கேற்று இருபத்தி ஒரு சதங்களை அடித்து கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகமான சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
